இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு! ஜார்க்கண்ட் போராட்டம்: 900 பேர் மீது வழக்குப்பதிவு!சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு! 2ஆவது டெஸ்ட்: வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸ்திரேலியா பதிலடி

பேட்மேனாக ராகுல் காந்தி: தில்லியில் வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள் வைரல்!

தில்லியில் ராகுல் காந்தியை பேட்மேனுடன் ஒப்பிட்டு போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

தில்லியில் ராகுல் காந்தியை பேட்மேனுடன் ஒப்பிட்டு வைக்கப்பட்டுள்ள போஸ்டர்கள். - ANI

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:10 pm IST

தில்லியில் ராகுல் காந்தியை பேட்மேனுடன் ஒப்பிட்டு போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன.

காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை ஹாலிவுட் காமிக் கதாபாத்திரமான பேட்மேனுடன் இணைத்து சித்திரித்த போஸ்டர்கள் தில்லியில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தின் வெளியே வைக்கப்பட்டுள்ளன.

அந்த போஸ்டர்களில் ராகுல் காந்தியின் படத்துடன் பேட்மேனின் படமும் இடம்பெற்றிருந்தது. அதன்கீழ், அமைதியான காப்பாளர்' மற்றும் 'கண்காணிப்பான பாதுகாவலர்' என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்தன. மேலும், ‘மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி - நிஜ வாழ்வின் பேட்மேன்’ என்றும் எழுதப்பட்டிருந்தது.

தில்லி இளைஞர் காங்கிரஸ் தலைவர் அக்‌ஷய் லக்ரா இந்த போஸ்டர்களை வைத்துள்ளார். காங்கிரஸ் தலைமையகத்தின் நுழைவாயில் மற்றும் இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தின் அருகே இந்த போஸ்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. இது சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.

சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் இளைஞர்களின் கேள்விகளுக்கு ராகுல் காந்தி பதிலளித்தார். அதில், ஒருவர் நீங்கள் பேட்மேனா? என்று கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு நகைச்சுவையாக பதிலளித்த ராகுல் காந்தி “என்னையும் பேட்மேனையும் ஒரே அறையில் யாரும் பார்த்ததில்லை என்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.

அவரின் அந்தப் பதிலைத் தொடர்ந்து இந்த போஸ்டர்கள் பேட்மேனுடன் ஒப்பிட்டு வைக்கப்பட்டுள்ளன.

ஜென் ஸீ இளைஞர்களைக் கவரும் விதமாக இன்ஸ்டாகிராமில் அவர்களின் கேள்விகளுக்கு தீவிரமாகவும், நகைச்சுவையாகவும் ராகுல் காந்தி பதிலளித்திருந்தார்.

Summary

Posters comparing Rahul Gandhi to Batman have been put up in Delhi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.