ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் நிலச்சரிவு ஏற்பட்டிருப்பது பற்றி...

Massive landslide disrupts traffic on Jammu-Srinagar national highway

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை,

Published On :17 ஆகஸ்ட் 2026, 1:19 pm IST

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் உதாம்பூர் மாவட்டத்தில் உள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் திங்கள்கிழமை நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டதாகவும், குறிப்பாக ஸ்ரீநகர் நோக்கிச் செல்லும் பாதையின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகவும் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நெடுஞ்சாலையின் பல இடங்களில் போக்குவரத்தைச் சீரமைக்கும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். பெருளவு சேறு, பாறைகள் மற்றும் இடிபாடுகள் நெடுஞ்சாலையில் சரிந்து விழுந்ததால், அவற்றை அகற்றி, போக்குவரத்தைச் சீரமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

வானிலை சீரடைந்து, நெடுஞ்சாலை பாதுகாப்பானது என அறிவிக்கப்படும் வரை, இந்தப் பகுதியில் அத்தியாவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு வாகன ஓட்டிகளுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சுமார் 300 கி.மீ நீளம் கொண்ட ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை, காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கான முக்கிய அத்தியாவசியப் பொருட்கள் விநியோகப் பாதையாக விளங்கி வருகிறது.

Summary

A massive landslide on Monday disrupted traffic on the strategic Jammu-Srinagar national highway in Jammu and Kashmir’s Udhampur district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.