ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பள்ளி முதல்வரின் மதுப்பழக்கம்; போராட்டத்தில் இறங்குவேன்: அபிஜீத் தீப்கே

பள்ளி முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் இறங்குவேன் என அபிஜீத் தீப்கே தெரிவித்தது பற்றி...

Abhijit Deepke with the people.

மக்களுடன் அபிஜீத் தீப்கே. - படம் - எக்ஸ்

Published On :16 ஆகஸ்ட் 2026, 11:47 am IST

மது அருந்திவிட்டு பள்ளிக்கு வரும் அந்தப் பள்ளியின் முதல்வர் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், போராட்டத்தில் இறங்குவேன் என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

நாட்டின் சுதந்திர நாள் சனிக்கிழமை (ஆக. 15) கொண்டாடப்பட்ட நிலையில் சிஜேபி நிறுவனர் அபிஜீத் தீப்கே மகாராஷ்டிரத்தின் ஹிங்கோலி மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான சந்துக் பிம்ப்ரியில் தேசிய கொடியேற்றினார்.

இதனைத் தொடர்ந்து, பள்ளிக்குழந்தைகள், கிராமவாசிகள் மற்றும் ஆசிரியர்கள் உடன் நடைபெற்ற சுதந்திர நாள் கொண்டாட்ட நிகழ்ச்சியில் அபிஜீத் தீப்கே மற்றும் சிஜேபி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அங்குக் கூடிய கிராம மக்கள் பள்ளி முதல்வர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதாகக் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, தனது சொந்த கிராமமான சந்துக் பிம்ப்ரியில் இருந்து ஸ்கூல்திக்கரோ (பள்ளிகளைச் சீரமைப்போம்) எனும் பிரசாரத்தை அபிஜீத் தீப்கே தொடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அபிஜீத் தீப்கே தனது எக்ஸ் பக்கத்தில் இன்று விடியோ ஒன்றை வெளியிட்டு, சில கருத்துகளையும் குறிப்பிட்டுள்ளார். அந்த விடியோவில் பள்ளியின் உயர் அதிகாரி யாருடனோ கைப்பேசியில் தொடர்புகொண்டு பேசுகிறார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது:

பள்ளி முதல்வரின் குடிப்பழக்கம் குறித்து கிராம மக்கள் பலமுறை புகார் அளித்துள்ளனர், ஆனால் உயர் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

செவ்வாய்க்கிழமைக்குள் முதல்வர் நீக்கப்படாவிட்டால், நானும் கிராம மக்களுடன் போராட்டத்தில் இணைவேன். மேலும், அந்தப் பள்ளியில் ஐந்து வகுப்பறைகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்தப் பிரச்னைகளை சாதாரணமாக விட முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நீட் தேர்வு முறைகேடுகளை எதிர்த்து, தில்லியின் ஜந்தர் மந்தரில் அபிஜீத் தீப்கே தலைமயிலான சிஜேபி போராட்டம் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Summary

Abhijit Deepke, leader of the Karappanpoochi Janata Party, has stated that he will launch a protest if no action is taken against the school principal who arrives at school after consuming alcohol.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.