ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பள்ளி செல்ல சாலை வேண்டும்! ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மாணவர்கள்!

பள்ளிக்குச் செல்ல முறையான சாலை வசதி கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டது குறித்து...

school students run into collectorate cockroch janata party

ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழையும் மாணவர்கள்... - இன்ஸ்டாகிராம்

Published On :12 ஆகஸ்ட் 2026, 6:44 pm IST

உத்தரப் பிரதேசத்தில் பள்ளிக்குச் செல்ல முறையான சாலை வசதி செய்துதரக் கோரி அரசுப் பள்ளி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.

கிராமப்புறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளின் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்தும் வகையில் சுதந்திர நாளான ஆக. 15 முதல் நாடு தழுவிய பிரசாரத்தை தொடங்க கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) அழைப்பு விடுத்துள்ளது.

கிராமப்புறங்களில், மலைப்பிரதேசங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், முறையான மதிய உணவு, விளையாட்டுத் திடல், சாலை வசதி உள்ளிட்டவற்றை உறுதி செய்யும் வகையில் இந்த பிரசாரத்தை சிஜேபி தொடங்கியுள்ளது.

இதற்காக ஆதரவாளர்கள், பெற்றோர்கள், பஞ்சாயத்து தலைவர்கள் என அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் உள்ள குறைபாடுகள் குறித்து விடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் அக்கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து பள்ளிக்கு சாலை வசதி கோரி உத்தரப் பிரதேசத்தில் கிராமப்புறத்தைச் மாணவர்கள் விடியோ வெளியிட்டிருந்தனர். இதனை கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளது.

இதேபோன்று மகாராஷ்டிரத்தின் இரு மாணவிகள், தாங்கள் பள்ளிக்குச் செல்ல சரியான சாலை இல்லை எனக் கூறி விடியோ வெளியிட்டிருந்தனர். இந்த விடியோ பகிரப்பட்ட மறுநாளே, அந்த கிராமத்தில் சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது. இந்த இரண்டு விடியோக்களையும் சேர்த்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பகிர்ந்துள்ளது.

மாணவர்களுக்குத் தேவையான கல்வி அடிப்படை உரிமை என்றும் அது அரசு கொடுக்கும் சலுகை அல்ல; இதனால் மாணவர்கள் அடிப்படை வசதிகளை கேட்டுப்பெறுவது பாராட்டுக்குரியது என பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் உத்தரப் பிரதேச மாநிலம் ஹமிர்பூர் பகுதியைச் சேர்ந்த மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு சாலை வசதி செய்துதரக்கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். காவல் துறையினர் தடுத்தும் முழக்கங்களை எழுப்பியவாறு மாணவர்கள் ஆட்சியர் அலுவலகத்திற்குள் நுழைந்தனர். இந்த விடியோவையும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பகிர்ந்துள்ளது.

Summary

We need a road to get to school Students lay siege to the Collector's office uttar pradesh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.