ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

தொடர் அமளி: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைப்பு!

எதிர்க்கட்சி எம்பிக்கள் அமளியைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது பற்றி...

ombirla

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா - படம்: சன்சத்

Published On :11 ஆகஸ்ட் 2026, 11:55 am IST

மக்களவையில் பல்வேறு பிரச்னைகள் தொடர்பாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கமிட்டு அமளியில் ஈடுபட்டதால், அவை தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஒத்திவைக்கப்பட்டன.

மாநிலங்களவை கூடியதும், நீட் போராட்ட மாணவர்கள் மீதான காவல் துறையின் அத்துமிறல் குறித்து அவையில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா விளக்கமளிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

இதையடுத்து, மாநிலங்களவை பகல் 12 வரை ஒத்திவைக்கப்பட்டது.

அதேபோல, மக்களவையில், கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சியினர் தொடர்ந்து முழக்கமிட்டு அமலியில் ஈடுபட்ட நிலையில், மக்களவை செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

"அவையில் இடையூறு செய்வது ஜனநாயகத்தின் மாண்புக்கு எதிரானது, அவையில் விவாதங்களும் கலந்துரையாடல்களும் நடைபெற வேண்டும், மாணவர்களின் போராட்ட விவகாரம் குறித்து விவாதிக்க உள்துறை அமைச்சர் தயாராக இருப்பதாக அரசு உறுதியளித்துள்ளது" என்று மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா தெரிவித்தார்.

மேலும், ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் கண்ணியத்தைக் காக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

Summary

The Lok Sabha was adjourned within minutes of convening as opposition MPs raised slogans and created a ruckus over various issues.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.