ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ. காலமானார்!

பகுஜன் சமாஜ் கட்சியின் ஒரே எம்.எல்.ஏ. உமா சங்கர் சிங் மறைவு பற்றி...

Uma Shankar Singh

உமா சங்கர் சிங் - x

Published On :6 ஆகஸ்ட் 2026, 10:51 am IST

உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் உமா சங்கர் சிங், உடல்நலக் குறைவால் புதன்கிழமை காலமானார்.

கடந்த 2022 உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில், பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து உமா சங்கர் சிங் மட்டுமே வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட உமா சங்கர் சிங் (வயது 55) நீண்டகாலமாக வெளிநாட்டில் சிகிச்சையில் இருந்த நிலையில், புதன்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

உத்தரப் பிரதேசத்தின் கிழக்கு மாவட்டங்களில் பகுஜன் சமாஜ் கட்சியின் முகமாக திகழ்ந்த உமா சங்கர் சிங், 2012 முதல் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

கடந்த 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியைச் சந்தித்த நிலையில், உமா சங்கர் மட்டும் 6,583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உத்தரப் பிரதேச மாநிலம், லக்னெளவில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட அவரது உடலுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உள்பட பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Summary

Bahujan Samaj Party's lone MLA Uma Shankar Singh passes away!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.