ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

லயன்ஸ் கிளப்ஸ் சென்னை மாவட்ட ஆளுநராக உமா அனில்குமார் நியமனம்!

லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் சென்னை மாவட்ட ஆளுநராக உமா அனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

Uma Anilkumar appointed as Governor of Lions Clubs, Chennai

லயன்ஸ் கிளப்ஸ் சென்னை மாவட்ட ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள உமா அனில்குமார்

Published On :6 ஆகஸ்ட் 2026, 7:20 pm IST

லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் சென்னை மாவட்ட ஆளுநராக உமா அனில்குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

புகழ்பெற்ற தொழிலதிபரும், சமூக சேவையாளருமான ஐசிஎல் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி, துணைத் தலைவரும், முழுநேர இயக்குநருமான உமா அனில்குமார், லயன்ஸ் கிளப்ஸ் இன்டர்நேஷனல் சென்னை மாவட்டத்தின் ஆளுநராக அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றார்.

உலகின் மிகப் பெரிய மனிதநேய சேவை அமைப்புகளில் ஒன்றான லயன்ஸ் இயக்கத்தின் இந்த உயரிய பொறுப்பு, அதன் மிகவும் மதிப்புமிக்க தலைமைப் பதவிகளில் ஒன்றாகும்.

மாவட்ட ஆளுநராக, உமா அனில்குமார் நூற்றுக்கணக்கான லயன்ஸ் கிளப்களையும் ஆயிரக்கணக்கான உறுப்பினர்களையும் வழிநடத்தி, சமூகங்களுக்கு சேவை செய்வதற்கும் நீடித்த சமூக மாற்றத்தை உருவாக்குவதற்கும் லயன்ஸ் இயக்கத்தின் மனிதநேயப் பணிகளை முன்னெடுப்பார்.

ஐசிஎல் குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி, துணைத் தலைவர் மற்றும் முழுநேர இயக்குநராக, நிதிச் சேவைகள், சுற்றுலா, ஃபேஷன், மருத்துவ சேவைகள், முதலீடுகள் மற்றும் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிறுவனத்தின் விரிவாக்கத்திற்கு அவர் முக்கிய பங்காற்றியுள்ளார்.

அவரது தொலைநோக்கு வழிகாட்டுதலின் கீழ், இந்தியாவை மட்டுமல்லாது மத்திய கிழக்கு நாடுகளிலும் ஐசிஎல் குழுமம் நம்பகமான மற்றும் மதிப்புமிக்க நிறுவனமாக தன்னுடைய தடத்தை பதித்துள்ளது.

வணிக உலகிற்கு அப்பாற்பட்டும், உமா அனில்குமார் மனிதநேய சேவைகளில் தொடர்ந்து தன்னை அர்ப்பணித்து வருகிறார். பெண்களின் பொருளாதார முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்டு தொழில்முனைவு, வேலைவாய்ப்பு மற்றும் நிதி சுயநிறைவை உருவாக்கும் தளமாக துலைன் ஃபேஷன் உருவாக்கப்பட்டதும், உமா அனில்குமார் முன்னெடுத்த முக்கியமான முயற்சிகளில் ஒன்றாகும்.

தொழில்துறை தலைமைத்துவம் மற்றும் சமூக சேவையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்புகளுக்காக, பல்வேறு அமைப்புகளிடமிருந்து பல மதிப்புமிக்க விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

பொறுப்பேற்பதற்கு முன்னதாக பேசிய உமா அனில்குமார், ''தலைமை என்பது முன்னணியில் நிற்பது அல்ல. அதிகமான மக்களை வழிநடத்தவும், சேவை செய்யவும், மாற்றத்தை உருவாக்கவும் ஊக்குவிப்பதே உண்மையான தலைமை. நாம் சேவை செய்யும் ஒவ்வொரு சமூகத்திற்கும் அதிக

நம்பிக்கை, கருணை மற்றும் வாய்ப்புகளை கொண்டு வரும் ஒரு ஆண்டை ஒன்றிணைந்து உருவாக்குவதே எங்கள் நோக்கம்." எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.