ராஜீவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய டி.கே. சிவகுமார்!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு!வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!

கடவுள் ராமர் விதித்தபடியே நடக்கும்! விடுதலை குறித்து பிரிஜ் பூஷண் கருத்து!

பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து விடுதலையானது குறித்து பிரிஜ் பூஷண் பேட்டி....

brij bhushan

பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் - x

Published On :3 ஆகஸ்ட் 2026, 1:12 pm IST

கடவுள் ராமர் விதித்தபடியே நடக்கும் என்று மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த வழக்கிலிருந்து விடுதலையான பாஜக எம்பி பிரிஜ் பூஷண் சரண் சிங் தெரிவித்துள்ளார்.

இந்திய முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலிக் உள்பட 6 பேர் தொடர்ந்த பாலியல் துன்புறுத்தல் வழக்கிலிருந்து பாஜக எம்.பி.யும், இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் (டபிள்யுஎஃப்ஐ) முன்னாள் தலைவருமான பிரிஜ் பூஷணை தில்லி நீதிமன்றம் இன்று விடுதலை செய்தது.

இதையடுத்து, தில்லி நீதிமன்ற வளாகத்தில் பட்டாசு வெடித்து, மாலை அணிவித்து பிரிஜ் பூஷண் சிங்கை பாஜக தொண்டர்களும் அவரது ஆதரவாளர்களும் வரவேற்றனர்.

தொடர்ந்து செய்தியாளர்களுடன் பிரிஜ் பூஷண் பேசியதாவது:

“கடவுள் ராமர் எதை விதித்திருக்கிறாரோ, அதுவே நடக்கும். இந்த வழக்கு ஒரு சதி என்று நான் கூறினேன். என் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை என்று நிரூபிக்கப்பட்டால், நான் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வேன் என்று கூறியிருந்தேன். அந்த வார்த்தைகளில் இன்றும் உறுதியாக இருக்கிறேன்.

ஏறக்குறைய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, என்னையும் வினோத்தையும் (சம்மேளத்தின் முன்னாள் உதவிச் செயலர்) இன்று நீதிமன்றம் கண்ணியமான முறையில் விடுவித்துள்ளது.

பலவீனமானவர்கள், உரிமை மறுக்கப்பட்டவர்களுக்காக நான் எப்போதும் குரல் கொடுத்து வந்துள்ளேன். எனக்கு நீதி கிடைக்கும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருந்தது. நான் ஒருபோதும் குற்ற உணர்வுக்கு ஆளாகவில்லை. உரிமைகள் மீறப்பட்ட இளம் விளையாட்டு வீரர்களுக்காக நாங்கள் போராடினோம். அந்தப் போராட்டத்தில் நாங்கள் வெற்றி பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டார்.

Summary

What is meant to be will be, as destined by Lord Ram - Brij Bhushan Sharan Singh

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.