கேரளத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதாக சட்டவிரோதமாகக் குடியேறிய வங்கதேச பெண்கள் உள்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
கேரள மாநிலம், கார்யவட்டத்தில் வங்கதேச பெண்கள் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்பதாக பயங்கரவாத தடுப்புக் குழுவினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, கார்யவட்டத்தில் தடுப்புக் குழுவினர் சோதனை மேற்கொண்டபோது, ஒரு வாடகை வீட்டில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வந்ததும், அந்தக் கும்பலில்தான் வங்கதேச பெண்கள் இருப்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து, வங்கதேச பெண்கள் இருவரையும், பாலியல் தொழிலில் ஈடுபட்ட மேலும் 6 பேரையும் பயங்கரவாதத் தடுப்புக் குழுவினர் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள், இம்மாதத் தொடக்கத்தில் மருத்துவர்களைப்போல நடித்து ஒரு வீட்டை வாடகை எடுத்து, பாலியல் தொழில் நடத்தி வந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். இதுகுறித்து மேலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட வங்கதேச பெண்கள் இருவர் மீதும், சட்டவிரோதமாகக் குடியேறியதற்காகவும், பாலியல் தொழில் தொடர்பாகவும் தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Summary
Two Bangladeshi women held for illegal stay in Keralam; 6 others detained in prostitution probe
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம்: அதிகரிக்கும் பாம்புக் கடி சம்பவங்கள்; ஒரே நாளில் 16 பேர் பாதிப்பு

போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!
பாலியல் தொழிலில் ஈடுபட்ட 4 பெண்கள் கைது
வீடியோக்கள்

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை


