மேற்கு வங்க மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்டமாக காலை 7 மணி முதல் நடைபெற்று வந்த வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 89.99 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளது.
294 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு இரு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23 (வியாழக்கிழமை) நடைபெற்று முடிந்தது.
இரண்டாம் கட்டமாக இன்று (ஏப். 29)142 தொகுதிகளுக்கு ஏப். 29-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைற்றது. மேற்கு வங்க மாநிலத்தில் இரண்டு கட்டமாக பதிவான வாக்குகள் மே 4-இல் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் தொடர்ந்து நான்காவது முறையாக ஆட்சிக்கு வர முனைப்பு காட்டும் நிலையில், அக்கட்சியிடமிருந்து ஆட்சியைக் கைப்பற்ற பாஜக களமிறங்கியுள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கூட்டணிகளும் களத்தில் உள்ளன.
Summary
The second phase of voting in West Bengal concluded at 6 PM.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் கோளாறு! பல்வேறு இடங்களில் வன்முறை!!

மேற்கு வங்கத்தில் 2 ஆம் கட்ட தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது!

மேற்கு வங்க முதற்கட்ட தேர்தலில் 91.78% வாக்குப்பதிவு!

மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல் 2026! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
வீடியோக்கள்

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


