உத்தரப் பிரதேசத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம் காஸியாபாத் நகரம் இந்திராபுரம் பகுதியில் உள்ள கௌர் க்ரீன் அவென்யூ அடுக்குமாடி குடியிருப்பில் இன்று(புதன்கிழமை) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 5 முதல் 6 வீடுகள் முழுவதுமாக சேதமடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இன்னும் பாதிப்பு குறித்த முழு விவரங்கள் தெரியவில்லை.
தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயைக் கட்டுப்படுத்தியதால் அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை.
குடியிருப்பில் இருந்த சிலர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும் 17க்கும் மேற்பட்ட தீயணைக்கும் வாகனங்கள் பணியில் இருந்ததாகவும் தீயணைப்புத் துறை அதிகாரி ராகுல் குமார் தெரிவித்தார்.

ANI
தீ விபத்தினால் அப்பகுதி முழுவதும் புகைமூட்டமாக காட்சியளிக்கிறது. மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்து விசாரணை நடத்தவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Summary
Massive fire breaks out at Ghaziabad apartment in UP, fire tenders rush to spot
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லியில் ஏசி வெடித்து தீ விபத்து: 9 பேர் பலி!

போலி ஆவணத்துடன் இந்தியாவில் குடியேறிய பாகிஸ்தானியர் கைது!

அடுக்குமாடி குடியிருப்பில் வாக்குச் சாவடி

உ.பி.யில் ரயில் தண்டவாளத்தில் மல்யுத்த வீரர் சடலம்!
வீடியோக்கள்

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

அம்மா அம்மாதான் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தோழர்களை நெறிப்படுத்த மட்டுமே அந்த விடியோ! Thiruma விளக்கம்! | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே இதையெல்லாம் செய்யக் கூடாது? | CSK vs MI | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை



