ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?தமிழ்நாடு என்றாலே சாதனை! இன்னும் பல உயரங்களை அடைவது உறுதி! - முதல்வர் பதிவுதொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

சிக்கன் சமைப்பதில் வாக்குவாதம்: கணவனை வெட்டிக் கொன்ற மனைவி!

கோழிக்கறி சமைக்காதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் பற்றி..

News image

சிக்கன் - file photo

Updated On :28 ஏப்ரல் 2026, 8:14 am

தெலங்கானாவில் காமரெட்டி நகரில் கோழிக்கறி சமைக்காதது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதத்தில், கணவரை மனைவியே வெட்டிக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக காவல்துறை தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஏப்ரல் 25-ஆம் தேதி இரவு நிகழ்ந்தது. 28 வயதான பெண், பலசரக்கு விற்பனையாளராகப் பணிபுரிபவரைத் திருமண செய்திருந்தார். சம்பவ தினத்தன்று கணவர் கோழிக்கறி சமைக்கச் சொல்லியிருக்கிறார். ஆனால், அவரது மனைவி கோழிக்கறி சமைக்காததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது.

வாக்குவாதம் ஒருகட்டத்தில் கைகலப்பாக மாறியது. ஆத்திரமடைந்த மனைவி தனது கணவரை அரிவாளால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் கணவருக்குக் கடுமையான காயங்கள் ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

மதுபோதைக்கு அடிமையான அந்த நபர், தனது மனைவியை அடிக்கடி துன்புறுத்தி வந்ததாகவும், இதன் காரணமாகவே கணவன் - மனைவிக்கிடையே குடும்பப் பிரச்னை தொடர்பாகத் தொடர்ந்து சண்டை ஏற்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

கொல்லப்பட்டவரின் சகோதரர் அளித்த புகாரின் அடிப்படையில், இது தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சம்பவம் தொடர்பாக அந்தப் பெண் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர்.

Summary

A 35-year-old man was allegedly killed by his wife following an argument over not cooking chicken curry in Kamareddy town of Telangana, police said on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.