க்யூட் பிஜி 2026 தேர்வு முடிவுகள் வரும் ஏப். 24 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகளில் சேர பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில்(க்யூட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்தத் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
எம்.ஏ., எம்.எஸ்., எம்.பிஎச்., எம்.டெக்., பிஜி டிப்ளோமா மற்றும் அட்வான்ஸ்ட் டிப்ளோமா படிப்புகளில் சேர க்யூட்-பிஜி 2026 தோ்வு எழுதுவது கட்டாயம்.
அடுத்த கல்வியாண்டின் (2026-27) முதுநிலை படிப்புகளுக்கான க்யூட் பிஜி 2026 நுழைவுத் தேர்வு முன்னதாக நடைபெற்ற நிலையில், விடைக் குறிப்புகளை தேசிய தேர்வு முகவை அண்மையில் வெளியிட்டது.
இந்த நிலையில், க்யூட் பிஜி 2026 தேர்வு முடிவுகள் வரும் ஏப். 24 ஆம் தேதி வெளியிடப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமையின் எக்ஸ் தளப் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவரங்களை https://cuet.nta.nic.in என்ற இணையதளம் வழியாக தெரிந்துகொள்ளலாம்.
Summary
The National Testing Agency (NTA) has announced that the CUET PG 2026 exam results will be released on April 24.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது?

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை உமங் செயலியில் பதிவிறக்கம் செய்யும் முறை!

சிபிஎஸ்இ தேர்வு முடிவுகளை டிஜிலாக்கரில் பதிவிறக்கம் செய்வது எப்படி?

இன்று வெளியாகுமா சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்? முழு விவரம்!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


