வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் இன்று காலை முதல் 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
காலை 5.59 மணியளவில் காம்ஜோங் மாவட்டத்தை மையமாகக் கொண்டு 69 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 அளவில் பதிவாகியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, காலை 9 மணியளவில் 2-வது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டரில் 3.3 அளவில் பதிவாகியுள்ளது.
காம்ஜோங் மாவட்டத்திற்கு அருகிலுள்ள உக்ருல் மற்றும் இம்பால் மாவட்டங்களிலும், மேகாலயா மாநிலத்திலும் இந்த அதிர்வு உணரப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
மணிப்பூர் எல்லைக்கு அப்பால் உள்ள மியான்மர் நாட்டிலும் இன்று காலை 5.38 மணியளவில் 4.6 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
Summary
Two Earthquakes in Manipur Today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.9 ஆகப் பதிவு
மணிப்பூரில் இருந்து 132 என்சிசி மாணவர்களை மீட்ட இந்திய விமானப் படை!

குகி, நாகா சமூகங்களைச் சேர்ந்த 38 பேர் சிறைப்பிடிப்பு! - மணிப்பூர் அரசு அறிவிப்பு!

மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!
விடியோக்கள்

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK


