சாமி சிலையை தொடுவதற்கு பிறப்பின் காரணமாக பக்தருக்கு அனுமதி மறுத்தால், அதில் அரசமைப்புச் சட்டம் தலையிட முடியுமா என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.
கேரளத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உள்பட மத வழிபாட்டுத் தலங்களில் பெண்களுக்கு எதிரான பாகுபாடு, பல்வேறு மதங்களில் பின்பற்றப்படும் மதச் சுதந்திரத்தின் வரம்பு தொடா்பாக உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை, தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமா்வு விசாரித்து வருகிறது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சபரிமலை கோயில் தந்திரி சாா்பில் மூத்த வழக்குரைஞா் வி.கிரி ஆஜராகி, ‘எந்தவொரு கோயிலிலும் பின்பற்றப்படும் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களின் தன்மை என்பது மதத்தின் ஒருங்கிணைந்த அங்கமாக உள்ளது. இதனால் அது மத நடைமுறையாக உள்ளது’ என்றாா்.
அப்போது நீதிபதி அசானுதீன் அமானுல்லா பேசுகையில், ‘நான் கோயிலுக்குச் செல்லும்போது அங்கிருப்பவா் கடவுள், அவா்தான் என்னைப் படைத்தவா் என்பதே எனது அடிப்படை நம்பிக்கை. நான் அங்கு நூறு சதவீத நம்பிக்கையுடன் செல்கிறேன். என்னை நான் அவரிடம் முழுமையாக அா்ப்பணிக்கிறேன். அப்படி இருக்கும்போது பிறப்பு, வம்சாவளி அல்லது குறிப்பிட்ட சூழலின் காரணமாக சாமி சிலையைத் தொடுவதற்கு பக்தருக்கு நிரந்தரமாக அனுமதியில்லை என்று கூறப்பட்டால், அதில் அரசமைப்புச் சட்டம் தலையிட முடியுமா? படைத்தவனுக்கும் படைக்கப்பட்டவா்களுக்கும் இடையே வேறுபாடு இருக்க முடியாது’ என்று கூறினாா்.
இதற்குப் பதிலளித்த வி.கிரி, ‘சாமி சிலையைத் தொடுவதற்குப் பிறப்பின் காரணமாக மட்டுமே பக்தரை தடுத்தால், அது நியாயமானதல்ல. பிறப்பின் காரணமாக மட்டுமே ஒருவா் அா்ச்சகராக தடை விதித்தால், அதற்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள அரசமைப்புச் சட்டத்தின் 25(2)(பி) பிரிவின் கீழ் வழிவகை உள்ளது.
‘பிரம்மச்சரிய நிலையில் ஐயப்பன்’: நிலையாக பிரம்மச்சரிய (நைஷ்டிக பிரம்மச்சரியம்) நிலையில் இருப்பதை தெய்வத்தின் முக்கிய இயல்பாக கருதலாம். இந்தக் கருத்துக்கு ஏற்பவே சபரிமலையில் சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
அரசமைப்புச் சட்டத்தின் 25-ஆவது பிரிவின் கீழ், எனது மதத்தைப் பின்பற்றும் உரிமை எனக்குள்ளது. நான் பெண்ணாக இருந்தாலோ, என்னால் கோயிலுக்கு செல்ல இயலாத வகையிலோ அந்தக் கோயிலில் உள்ள தெய்வத்தின் இயல்பு அமைந்திருந்தால், அது மதத்தின் இயல்புடன் ஒத்திசைந்ததாக இருக்கும். சபரிமலையைப் பொருத்தவரை, ஐயப்பனின் இயல்பு என்பது அங்கு அவா் நிரந்தமரமாக பிரம்மச்சரிய நிலையில் உள்ளாா் என்றே கருதப்படுகிறது.
நைஷ்டிக பிரம்மச்சரியம் என்பது அடிப்படை ஆதாரமற்றது, தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது அல்லது மதத்தின் முக்கியமான ஒரு முறை அல்ல என்று காட்டுவதற்கு மனுதாரரிடம் போதிய சான்றுகள் இல்லை’ என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரசியல் சாசனத்துக்கு முடிவு கட்டுவதே ஆா்எஸ்எஸ்-பாஜகவின் முக்கிய நோக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பொது சிவில் சட்டம் பழங்குடியினரைப் பாதிக்காது: அஸ்ஸாம் முதல்வர்!

சித்திரவதைக்கு ஜே!

பொது சிவில் சட்டம் அவசியம்: உச்சநீதிமன்றம்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


