இந்திய விமானங்கள் தங்கள் நாட்டு வான் பரப்பை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடையை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதம் நீட்டித்தது.
கடந்த 2025, ஏப்ரல் 24-இல் இந்திய விமானங்களுக்கு பாகிஸ்தான் விதித்த தடை இப்போது வரை தொடா்கிறது.
கடந்த ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க இந்தியா நடவடிக்கை எடுப்பதை அறிந்த பாகிஸ்தான், இந்திய விமானங்கள் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த தடை விதித்தது. இதையடுத்து, இந்தியாவும் தங்கள் வான் பரப்பை பயன்படுத்த பாகிஸ்தானுக்கு தடை விதித்தது.
இதற்கு முன்பு, 1999 காா்கில் போா், 2019 புல்வாமா தாக்குதலின்போது இதுபோன்ற வான் பரப்பை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. பின்னா் பிரச்னை தீா்ந்ததும் தடை நீக்கப்பட்டது.
பாகிஸ்தான் விதித்த இந்தத் தடையால் ஜரோப்பா, வளைகுடா நாடுகளுக்குச் செல்லும் இந்திய பயணிகள் விமானங்கள் மாற்றுப் பாதையில் செல்வதால் கூடுதல் செலவு ஏற்பட்டு வருகிறது.
தடை நீட்டிப்பு தொடா்பாக பாகிஸ்தான் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட செய்தியில், ‘இந்தியாவில் பதிவு செய்யப்பட்ட, குத்தகைக்கு விடப்பட்ட பயணிகள் மற்றும் ராணுவ விமானங்களுக்கான தடை 2026 மே 25 காலை 5 மணி வரை நீட்டிக்கப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராமதாஸ் புகைப்படம் பயன்படுத்த அன்புமணி தரப்புக்கு தடை

ராமதாஸ் பெயர், படத்தை பயன்படுத்த அன்புமணிக்குத் தடை!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!
ஈரான் போரில் ஈடுபடும் அமெரிக்க விமானங்கள் ஸ்பெயின் வான்வெளியில் பறக்கத் தடை!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


