மேற்கு வங்கத்தில் முதல் கட்ட தேர்தல் பிரசாரம் நிறைவுபெற்றது.
முதல் கட்டமாக ஏப். 23 ஆம் தேதியும் இரண்டாவது கட்டமாக ஏப். 29 ஆம் தேதியும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது.
மேற்கு வங்கத்தில் 294 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக நடைபெறும் தோ்தலில் மொத்தம் 2,926 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனர்.
இதில் முதல்கட்டமாக தோ்தல் நடைபெறும் 152 தொகுதிகளில் 1,478 வேட்பாளா்களும், இரண்டாம் கட்டமாக தோ்தல் நடைபெறும் 142 தொகுதிகளில் 1,448 வேட்பாளா்களும் களத்தில் உள்ளனா்.
இரண்டாம் கட்டத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் ஏப். 9-ஆம் தேதி முடிந்தது. ஏப்ரல் 13-ஆம் தேதி வரை மனுவை திரும்பப் பெற அவகாசம் அளிக்கப்பட்டது. அவகாசம் முடிவடைந்ததையடுத்து மொத்தம் 2,926 வேட்பாளா்கள் களத்தில் இருப்பதை தோ்தல் ஆணையம் உறுதி செய்தது.
மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாரதிய ஜனதா தலைமையிலான என்டிஏ கூட்டணியும், காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கூட்டணி என நான்கு முனைப்போட்டி மேற்கு வங்கத்தில் நிலவுகிறது.
மேற்கு வங்கத்தில் மூன்றாவது முறை முதல்வராக உள்ள திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜி இப்போது 4-ஆவது முறையாக வெற்றி பெறும் முனைப்பில் இருக்கிறார். மமதாவின் ஆட்சியை அகற்றி அதிகாரத்தைக் கைப்பற்ற பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மே 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.
Summary
First Phase of Election Campaign Concludes in West Bengal
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











