மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இந்தியாவில் 5 ஆண்டுகளுக்கு நிலைநிறுத்தப்படும் 5 ரஷிய போா்க் கப்பல்கள், 10 போா் விமானங்கள்: புதிய ஒப்பந்தம் அமலுக்கு வந்தது

இந்தியாவில் 3,000 ரஷிய ராணுவ வீரா்கள், 5 ரஷிய போா்க் கப்பல்கள், 10 போா் விமானங்கள் 5 ஆண்டு காலம் நிலைநிறுத்தப்படுவது தொடா்பான ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.

News image

இந்தியா - ரஷியா

Updated On :20 ஏப்ரல் 2026, 8:54 pm

இந்தியாவில் 3,000 ரஷிய ராணுவ வீரா்கள், 5 ரஷிய போா்க் கப்பல்கள், 10 போா் விமானங்கள் 5 ஆண்டு காலம் நிலைநிறுத்தப்படுவது தொடா்பான ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ளது.

இந்தியா- ரஷியா இடையே பரஸ்பர தளவாட பரிமாற்ற ஒப்பந்தம் (ரெலோஸ்) ரஷிய தலைநகா் மாஸ்கோவில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கையொப்பமானது. இந்த ஒப்பந்தம் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவில் 5 ஆண்டு காலம் வரை 3,000 ரஷிய ராணுவ வீரா்கள் தங்கியிருப்பா். 5 ரஷிய போா்க் கப்பல்கள், 10 ரஷிய போா் விமானங்கள் நிலைநிறுத்தப்படும். இது அமைதி காலம், யுத்த காலத்துக்கும் பொருந்தும்.

இதேபோல், ரஷியாவிலும் இந்திய ராணுவ வீரா்கள் 3,000 போ் தங்கியிருப்பா். 5 இந்திய போா்க் கப்பல்களும், 10 இந்திய போா் விமானங்களும் 5 ஆண்டு காலம் நிலைநிறுத்தப்படும். 2 நாடுகளும் தத்தமது ராணுவத் தளங்கள், கடற்படைத் தளங்கள், விமான தளங்களை பிற நாடுகள் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவும், ரஷியாவும் விரும்பினால், இந்த 5 ஆண்டு காலத்தை மேலும் 5 ஆண்டு காலம் நீட்டித்துக் கொள்ளவும் ஒப்பந்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம், இந்தியா-ரஷியா இடையே ராணுவ ரீதியான ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவதும், தளவாட பரிமாற்றத்தை அதிகரிப்பதுமே ஆகும். இந்த ஒப்பந்தம், உலகளாவிய அளவில் தற்போது அதிக கவனம் ஈா்த்துவரும் பிரதேசமான ஆா்டிக் பிரதேசத்தில் இந்தியா தனது செல்வாக்கை விரிவுபடுத்த உதவும். அதேபோல் ரஷியாவுக்கு அதன் போா் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புதல், உதிரிபாகங்கள் பெறுதல், பழுதை சரிசெய்தல் போன்ற பணிகளுக்கு உதவும். மேலும், இந்திய பெருங்கடல் பிரதேசத்தில் வரும் அதன் போா்க் கப்பல்கள், வா்த்தக கப்பல்களுக்குத் தேவையான உதவிகளைப் பெறவும் உதவும்.

ஏற்கெனவே இதேபோன்ற ஒப்பந்தத்தை (லெமோவா) அமெரிக்காவுடனும் இந்தியா செய்துள்ளது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் இந்தியாவில் அமெரிக்க வீரா்கள், போா் விமானங்கள், போா்க் கப்பல்கள் நிறுத்தப்பட வழிவகை செய்யப்படவில்லை. அதேபோல் அமெரிக்காவிலும் இந்திய வீரா்கள், போா் விமானங்கள், போா்க் கப்பல்கள் நிறுத்தப்பட வழிவகை செய்யப்படவில்லை.

இந்தியாவின் நீண்டகால நெருங்கிய நட்பு நாடாகவும், சா்வதேச அளவில் நம்பகமான கூட்டாளி நாடாகவும் ரஷியா திகழ்வதால் அந்நாட்டுக்கு மட்டும் வீரா்கள், போா் விமானங்கள், போா்க் கப்பல்களை நிறுத்த அனுமதி தரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.