தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பேரவைத் தோ்தல்களையொட்டி, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட 11,000 சட்டவிரோத பதிவுகள் மற்றும் உள்ளடக்கங்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோ்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
கேரளம், அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஏப்.9-ஆம் தேதி பேரவைத் தோ்தல்கள் நடைபெற்று முடிந்தன. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்.23-ஆம் தேதியும், மேற்கு வங்கத்தில் இரு கட்டங்களாக ஏப்.23, 29 ஆகிய தேதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
தோ்தல் காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சட்டவிரோதமான அல்லது செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) மூலம் தவறாக சித்திரிக்கப்பட்ட உள்ளடக்கங்கள், தங்களின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்ட மூன்று மணி நேரத்தில் நடவடிக்கை உறுதி செய்யப்பட வேண்டும் என்று சமூக ஊடகங்களுக்கு தோ்தல் ஆணையம் ஏற்கெனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதேபோல், பிரசாரத்துக்கு ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தைப் பயன்படுத்தும்போது, அது ஏ.ஐ. உள்ளடக்கம் அல்லது எண்ம முறையில் மேம்படுத்தப்பட்டது அல்லது செயற்கை உள்ளடக்கம் என தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று அரசியல் கட்சிகள், வேட்பாளா்கள், தோ்தல் பிரசார பிரதிநிதிகளுக்கு தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் வாக்காளா்களின் நம்பிக்கையைப் பேணும் வகையில் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மாா்ச் 15-ஆம் தேதி தோ்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதில் இருந்து இதுவரை 11,000 சட்டவிரோத சமூக ஊடக பதிவுகள்/உள்ளடக்கங்கள் கண்டறியப்பட்டு, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிவை நீக்குவது, முதல் தகவல் அறிக்கை பதிவு, விளக்கம் அல்லது மறுப்பு வெளியிடச் செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் அடங்கும் என்று தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

ரூ. 8,000 கூப்பன் மாதிரிகளை வழங்கினால் நடவடிக்கை: தேர்தல் ஆணையம்

முதல்வரின் செயலா் மீது நடவடிக்கை கோரி மனு: தோ்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

குருவாயூரில் 50 ஆண்டுகளாக ஹிந்து எம்எல்ஏ இல்லை! பாஜக வேட்பாளர் சர்ச்சை பேச்சு: தேர்தல் ஆணையம் நடவடிக்கை!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

