காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா செய்தியாளர் சந்திப்பில், “எதிர்ப்பு இடஒதுக்கீட்டுக்கு அல்ல; தொகுதி மறுவரையறைக்குத்தான்” என தெரிவித்துள்ளார்.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை 2029-ஆம் ஆண்டு முதல் அமல்படுத்துவதுடன், அவர்களுக்கு 283 மக்களவைத் தொகுதிகளை ஒதுக்கும் வகையில் மொத்த தொகுதிகளின் எண்ணிக்கையை 543 இல் இருந்து 850 ஆக அதிகரிக்க வகை செய்யும் சட்டத் திருத்த மசோதாக்களை நாடாளுமன்றத்தில் சட்டத்துறை அமைச்சர் இன்று அறிமுகம் செய்துள்ளார்.
இந்த நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இந்த மசோதாவை ஆதரித்தும் எதிர்த்தும் கருத்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
இதுகுறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. ராஜீவ் சுக்லா, “இந்த மசோதாவால் எந்தப் பாதிப்பும் இல்லை என்று பிரதமர் கூறினாலும் மசோதாவில் அது தெளிவாக இல்லை. ஆகையால், அந்த மசோதாவை எப்படி நம்ப முடியும்? அதில் பல சந்தேகங்கள் உள்ளன. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு முழு உடன்பாடு உள்ளது. ஒட்டுமொத்த எதிர்க்கட்சியினரும் அதற்கு ஆதரவளிக்கின்றனர். அதனால்தான் 2023 ஆம் ஆண்டு அது ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இருப்பினும், தற்போது புதிய சில அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
தொகுதி மறுவரையறை பின்னர் மேற்கொள்ளப்படும் என்றும், எதிர்க்கட்சியினரின் தொகுதிகளைச் சீர்குலைத்து, தங்களுக்கு சாதகமாக மாற்றியமைக்கும் வகையில் தொகுதிகள் அதிகரிக்கப்படும் என்று மத்திய அரசு கூறுகின்றது.
இந்த நடைமுறையில் முறைகேடு செய்யப்படலாம் என்பதுதான் எதிர்க்கட்சியின் கவலை. எனவே, மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை. இடங்களை சுமார் 850 ஆக அதிகப்படுத்தும் திட்டத்துக்கும், எதிர்க்கட்சியை பலவீனப்படுத்தும் இந்தச் செயலுக்கும் மட்டுமே எதிர்ப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.
Summary
Congress MP Rajiv Shukla has stated that the opposition is not against reservation, but rather against constituency delimitation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சிக்கிம் மாநிலத்தில் மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவளித்து பேரணி! 25,000 பெண்கள் பங்கேற்பு!

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு நவீன் பட்நாயக் எதிர்ப்பு!

திருவாடானை தொகுதி தவெக வேட்பாளா்

மம்தாவுக்கு உறுதுணையாக இருந்ததால் முன்னாள் டிஜிபிக்கு எம்.பி. சீட்: பாஜக
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



