தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார்.
நாடாளுமன்ற 3 நாள் சிறப்பு அமர்வு கூட்டம் இன்று தொடங்கியுள்ள நிலையில், தொகுதி மறுவரையறை மசோதா, யூனியன் பிரதேச தொகுதிகள் மறுவரையறை திருத்த மசோதா, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா ஆகிய 3 மசோதாக்கள் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை மாலை 4 மணிக்கு நடைபெறும் என்றும் அதுவரை மசோதாக்கள் மீதான விவாதம் நடைபெறும் என்றும் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா கூறியுள்ளார்.
இதனிடையே நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுடன் பேசிய திமுக எம்.பி. திருச்சி சிவா,
"தொகுதி மறுவரையறையால் தென் மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டுக்கு 48 இடங்கள் மட்டுமே கிடைக்கும். தென்னகத்தை வஞ்சிக்கும் நோக்கில் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீட்டை திமுக எதிர்க்கவில்லை. 2023 ஆம் ஆண்டு இந்த மசோதா கொண்டுவரப்பட்டபோது திமுக ஆதரித்தது. இப்போது தொகுதி மறுவரையறை மசோதாவுடன் இதனைக் கொண்டுவர அவசியம் என்ன? 48 மணி நேரத்துக்கு முன்னர்தான் மசோதாக்கள் பற்றிய செய்திகள் வெளியில் வருகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகள் என யாருக்கும் இதுபற்றி தெரியாது. 5 மாநிலத் தேர்தல் முடிந்து அவையை நடத்த கோரிக்கை விடுத்தோம். ஆனால் அவர்கள் மறுக்கிறார்கள், என்ன காரணம் என்று தெரியவில்லை.
இது பாஜகவின் பாஜகவின் சூழ்ச்சிகளில் ஒன்று. திடீரென அறிவித்து செய்கிறார்கள். எல்லாவற்றையும் தந்திரமாக செய்து முடிக்க பாஜக நினைக்கிறது.
இந்த மசோதாக்களுக்கு 3ல் ஒரு பங்கு ஆதரவு வேண்டும். அது இருக்காது, மசோதாக்கள் நிறைவேறாது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறோம். தமிழ்நாட்டின் பாதுகாப்புத்தன்மை உறுதி செய்யப்படும்" என்றார்.
Summary
Southern states will be severely affected by delimitation: Trichy Siva
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்?

நாடாளுமன்ற குழுக்களின் தலைவா்களாக தம்பிதுரை, திருச்சி சிவா மறுநியமனம்

தமிழகத்தில் பாஜகவை நுழைய விடாமல் தடுத்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின்: திருச்சி சிவா பேச்சு
தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டு
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!




