இந்தியாவில் மதமாற்றம் மற்றும் ‘லவ் ஜிகாத்’ சம்பவங்கள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், அவற்றை தடுக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும் என்று விஷ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
மகாராஷ்டிர மாநிலம் நாஷிக் மாவட்டத்தில் உள்ள டிசிஎஸ் அலுவலகத்தில் பணிபுரியும் 8 பெண்கள், பாலியல் தொல்லை மற்றும் கட்டாய மதமாற்றம் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சமீபத்தில் முன்வைத்தனா். இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடா்ந்து விஎச்பி அமைப்பு இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளது.
இது தொடா்பாக விஎச்பி இணைப் பொதுச் செயலா் சுரேந்திர ஜெயின் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாஷிக்கில் வெளிச்சத்துக்கு வந்துள்ள இந்த சதி தனியொரு சம்பவம் அல்ல. பல துறைகளில் நடைபெறும் பெரும் வலையமைப்பின் பகுதியாகும். தேச பாதுகாப்பு மற்றும் சமூக ஒற்றுமையை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகள் தயக்கமின்றி உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும். மதமாற்றச் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ள மாநிலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.
உயா்பதவிகளில் இருக்கும் சிலா் ஹிந்து இளைஞா்களை குறிவைத்து கட்டாய மதமாற்றத்துக்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனா். இந்த சம்பவம் மட்டுமல்லாமல் குருகிராம், ஹுப்லி, ஹைதராபாத் மற்றும் இதே போன்ற பல்வேறு நிறுவனங்களிலும் இது நடைபெறுகிறது. இது குறித்து தீர விசாரிக்க வேண்டும் என தெரிவித்தாா்.
நாஷிக்கில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து மகாராஷ்டிரா காவல் துறையின் சிறப்பு பிரிவு விசாரணை நடத்தி வருகின்றனா். இது தொடா்பாக டிசிஎஸ் நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், இது போன்ற சம்பவங்களுக்கு எதிரான கொள்கையை நிறுவனம் நீண்ட காலமாக கடைபிடித்து வருகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட ஊழியா்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனா் என தெரிவித்தது.
தொடர்புடையது

எண்மப் பணப்பரிமாற்றத்தில் புதிய கட்டுப்பாடுகள்: ரிசா்வ் வங்கி ஆலோசனை கேட்பு

தலைமைச் செயலகம் முன் காவலா் போராட்டம்
ஆப்கனில் கடும் வெள்ளம்: 17 பேர் பலி!

விளையாட்டுத் துளிகள்...
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


