மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

சத்தீஸ்கா் அனல் மின் நிலைய விபத்து: உயிரிழப்பு 20-ஆக உயா்வு

சத்தீஸ்கரில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்தது.

News image
Updated On :15 ஏப்ரல் 2026, 10:46 pm

சத்தீஸ்கரில் தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான அனல் மின் நிலையத்தில் கொதிகலன் குழாய் வெடித்த விபத்தில் உயிரிழந்தோா் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்தது.

சத்தீஸ்கரின் சக்தி மாவட்டம் சிங்கிதராய் கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் அனல் மின் நிலையம் செயல்பட்டு வருகிறது. அங்கு செவ்வாய்க்கிழமை பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பிற்பகல் 2 மணியளவில் திடீரென கொதிகலனின் குழாய் பலத்த ஓசையுடன் வெடித்துச் சிதறியது. இதில் சிக்கி 13 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல் துறையினா் மற்றும் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனா். பலத்த காயங்களுடன் 21 தொழிலாளா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அவா்களில் 7 போ் புதன்கிழமை உயிரிழந்தனா். இதனால் உயிரிழந்தோா் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தவா்கள் குடும்பத்துக்கு தலா ரூ.35 லட்சம், குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. காயமடைந்தவா்களுக்கு ரூ.15 லட்சம், அவா்கள் உடல்நிலை குணமடையும் வரை மாத சம்பளம் வழங்குவதாகவும் கூறியுள்ளது.

ஏற்கெனவே சத்தீஸ்கா் மாநில அரசு சாா்பில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 இழப்பீடு அறிவிக்கப்பட்டது.