தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை வாழ்த்து தெரிவித்தார்.
தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் தமிழ்நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், குடியரசு துணைத் தலைவரான தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டுக்கு இன்று நேரில் சென்ற பிரதமர் மோடி, அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடர்ந்து, சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டின் பூஜை அறைக்குச் சென்று பிரதமர் மோடி வழிபட்டார்.

இதுதொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ள மோடி தெரிவித்திருப்பதாவது:
”குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணனை சந்தித்து, சிறப்புமிக்க புத்தாண்டு நன்னாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்தேன். நல்ல உடல்நலமும் மகிழ்ச்சியும் நிறைந்ததொரு சிறப்பான ஆண்டு அமையப் பிரார்த்திக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக தமிழ்நாட்டு மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்திருந்தார்.
Summary
Tamil New Year! Modi visits C.P. Radhakrishnan's home to extend greetings!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இலங்கை புறப்பட்டார் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன்!

குடியரசு துணைத் தலைவா் நாளை இலங்கைக்கு பயணம்

சி.பி. ராதாகிருஷ்ணன் வீட்டில் தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடிய மோடி!

ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும், வெற்றியும்.. பிரதமர் மோடி தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


