பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மறைவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், "அவரது குரலின் வழியாக, அவரது கலை நம்மிடையே என்றும் அழியாமல் நிலைத்திருக்கும். இந்தத் துயரமான நேரத்தில், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அன்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்," இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக்குறைவால் மும்பையில் இன்று (ஏப்ரல் 12) காலமானார். பாடகி ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 12,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். குறிப்பாக ஹிந்தியில் காலத்தால் அழியாத பல பாடல்களையும் அவர் பாடியுள்ளார்.
ஆஷா போஸ்லேவின் மறைவுச் செய்தியை அவரது மகன் ஆனந்த் போஸ்லே உறுதி செய்துள்ளார். அவரது இறுதிச் சடங்குகள் நாளை மாலை 4 மணிக்கு மும்பையில் உள்ள சிவாஜி பூங்காவில் நடைபெறும் என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஆஷா போஸ்லே மறைவுக்கு பிரதமர் மாடி உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Summary
Through her voice, Asha Bhosle’s art will forever remain immortal among people, Congress leader Rahul Gandhi said on Sunday, condoling the demise of the legendary playback singer.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்!

ஆஷா போஸ்லே மறைவுக்கு இரங்கல் தெரிவித்த ஆஸி. கிரிக்கெட் வீரர்!
தலைமுறைக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பவர் ஆஷா போஸ்லே: பிரதமர்

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



