மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை வரவேற்பதாக முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சனிக்கிழமை (ஏப்.11) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவைகளில் 2029-ஆம் ஆண்டு முதல் 33 சதவீத மகளிர் இடஒதுக்கீட்டை அமல்படுத்தவும், மகளிருக்கு 273 இடங்களை ஒதுக்கும் வகையில் மொத்த மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை 816-ஆக உயர்த்தவும் வழிவகுக்கும் வரைவு மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை (ஏப்.8) ஒப்புதல் வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரின் தொடர்ச்சியாக, ஏப்.16 முதல் 3 நாள்களுக்கு நடைபெறும் சிறப்பு அமா்வில் இந்த மசோதாக்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, “இந்த மசோதாவை நான் வரவேற்கிறேன். இது நீண்டகாலமாக எடுக்கப்பட்டு வரும் ஒரு முடிவு. பெண்களுக்கு இடஒதுக்கீடு கோரி வெகுநாள்களுக்கு முன்பே நாங்கள் தீர்மானம் நிறைவேற்றியது எனக்கு நினைவில் இருக்கிறது. பெண்களுக்கு 33 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்குவது யாருக்கும் பிரச்னையாக இருக்கக் கூடாது” எனத் தெரிவித்தார்.
இதனிடையே, எதிர்க்கட்சியான காங்கிரஸ் மகளிர் இடஒதுக்கீட்டை ஆதரித்தாலும், பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு தனது நிர்வாகத்தில் ஏற்பட்ட நிலையற்ற தன்மையை மூடிமறைக்கவே இந்த மசோதாவை அவசரமாகக் கொண்டுவருவதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
Summary
Former Vice President Venkaiah Naidu stated on Saturday (April 11) that he welcomes the Women's Reservation Bill.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பிரக்ஞானந்தாவுக்கு குடியரசுத் துணைத் தலைவர் வாழ்த்து!

ம.பி. படகு விபத்து! குடியரசுத் துணைத் தலைவர் இரங்கல்!

ஏமா(ற்)றுகிறார்கள்!

நாடாளுமன்றம் கைப்பற்றப்படுவதை எதிர்க்கட்சிகள் ஒருபோதும் அனுமதிக்காது: கார்கே
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK




