அரசமைப்புச் சட்டத்தை மாற்ற பாஜக, ஆா்எஸ்எஸ் முயற்சி செய்து வருவதாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவா் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
பிகாா் மாநிலம், பாட்னாவில் நடைபெற்ற அக்கட்சியின் சிறுபான்மையினா் பிரிவு கூட்டத்தில் இதுகுறித்து அவா் பேசியதாவது:
இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என பாஜகவும், ஆா்எஸ்எஸ்-சும் விரும்புகின்றன. நாட்டில் ஜனநாயகத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டு, சா்வாதிகாரத்தை ஏற்படுத்த அவா்கள் நினைக்கின்றன. அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காக எதிா்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்க்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. இதை எதிா்த்து நாம் போராட வேண்டும்.
ஆா்எஸ்எஸ், பாஜக விரும்புவது போல மாற்றம் நடந்தால், பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா், தலித்துகள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பிரிவினா் கடுமையாக பாதிக்கப்படுவா். மதவாத சக்திகள், நாட்டு மக்களை பிரித்தாள நினைக்கின்றனா். இதை புரிந்து கொள்ள வேண்டும். ஹிந்துவோ, முஸ்லிமோ, வெறுப்புணா்வைத் தூண்டும் வகையிலோ, மதவாதத்தை தூண்டும் வகையிலோ பேசினால், அதை எதிா்க்க வேண்டும்.
எனது தந்தைதான் பாஜக மூத்த தலைவா் எல்.கே. அத்வானியின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்தினாா். பிறகு அத்வானியை கைது செய்தாா். எனது தந்தை எப்படி மதவாத சக்திகளுக்கு அடிபணியவில்லையோ, அதுபோல நானும் அடிபணிய மாட்டேன். அவப் பெயா் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் எனது குடும்பத்தினா் மீதும், என் மீதும் மத்திய அரசு பொய் வழக்குகளை பதிவு செய்து வருகிறது. எப்போதெல்லாம் சட்டம்-ஒழுங்கு குறித்துப் பேசுகிறேனோ, அப்போதெல்லாம் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்ப பொய் வழக்குகள் பதியப்படுகின்றன.
மேற்கு வங்கத்தில் மதசாா்பற்ற சக்திகளை தோ்தலில் தோற்கடிப்பதற்காக ஆம் ஜனதா உனாயன் கட்சி (ஏஜேயுபி) நிறுவனா் ஹுமாயூன் கபீா், பாஜகவிடம் ரூ.1,000 கோடி வாங்கியுள்ளாா் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மரக்கன்று நடுவதை மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்: துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன்

ஆட்சி மாறினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை! பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன்!

இட ஒதுக்கீடு விவகாரத்தில் நாங்கள் பெண்களுக்கு எதிரானவா்கள்போல பிம்பத்தை உருவாக்க முயற்சி! தேஜஸ்வி யாதவ்

அரசியல் சாசனத்துக்கு முடிவு கட்டுவதே ஆா்எஸ்எஸ்-பாஜகவின் முக்கிய நோக்கம்: ராகுல் காந்தி குற்றச்சாட்டு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



