வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளால் (எஸ்ஐஆர்) தனக்கு 10,000 வாக்குகளை இழப்பு ஏற்பட்டதாக, கேரளத்தின் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் சாண்டி உம்மன் தெரிவித்துள்ளார்.
கேரளத்தில், கடந்த வியாழக்கிழமை (ஏப். 9) அன்று சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று நிறைவடைந்தது. அம்மாநிலத்தில் 77.93% வாக்குகள் பதிவான இந்தத் தேர்தலின் முடிவுகள் வரும் மே 4 அன்று வெளியிடப்படவுள்ளன.
இந்த நிலையில், எஸ்ஐஆர் நடவடிக்கையின் மூலம் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்பட்டதால், சுமார் 10,000 வாக்குகளை தான் இழந்துள்ளதாக, கேரளத்தின் முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் மகனும், புதுப்பள்ளி காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினருமான சாண்டி உம்மன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“எனக்கு வாக்களிக்க விரும்பிய பலரும் வாக்குப்பதிவு மையத்துக்குச் சென்றதும் வாக்காளர் பட்டியலில் இருந்து தங்களது பெயர்கள் நீக்கப்பட்டிருப்பதை உணர்ந்து என்னிடம் கூறியுள்ளனர். எனவே, நான் இதை வாக்குகளை விடவும் பெரிய இழப்பாக உணர்கிறேன். சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் ஏராளமான மக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பறித்துள்ளது” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, இந்தத் தேர்தலில், கேரளத்தின் ஆளுங்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரிக் கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி இடையே மும்முனைப் போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
Summary
Chandy Oommen, a Congress MLA from Kerala, has stated that he suffered a loss of 10,000 votes due to the SIR.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எஸ்ஐஆருக்கு நன்றி!
கேரளத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஊழலால் மக்கள் அதிருப்தி: பிரதமர் மோடி

ரூ. 700 கோடி ஊழல் குற்றச்சாட்டுகளில் அடிப்படை முகாந்திரமில்லை: கேரள முதல்வா் பினராயி விஜயன்

கேரளம்: காங்கிரஸ் இரண்டாம் கட்ட வேட்பாளா் பட்டியல் வெளியீடு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



