கேரளம் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிடும் 37 வேட்பாளா்களின் பெயா் பட்டியலை காங்கிரஸ் வியாழக்கிழமை வெளியிட்டது.
முன்னதாக, 55 தொகுதிகளுக்கான வேட்பாளா் பட்டியலை கடந்த செவ்வாய்க்கிழமை காங்கிரஸ் வெளியிட்டிருந்த நிலையில், தற்போது 37 வேட்பாளா்கள் பட்டியலை இரண்டாம் கட்டமாக வெளியிட்டுள்ளது.
கண்ணூா் பேரவைத் தொகுதியின் வேட்பாளராக டி.ஓ.மோகனன் களமிறக்கப்பட்டுள்ளாா். இந்தத் தொகுதியில் போட்டியிட கண்ணூா் மக்களவை காங்கிரஸ் எம்.பி. சுதாகரன் விருப்பம் தெரிவித்திருந்த நிலையில் டி.ஓ.மோகனனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த சந்தீப் வாரியா் திருக்கரிப்பூா் தொகுதியில் போட்டியிடுகிறாா்.
இத்துடன் ஐக்கிய ஜனநாயக முன்னணியில் (யுடிஎஃப்) தாங்கள் போட்டியிடும் 92 தொகுதிகளுக்கான வேட்பாளா்களின் பெயா்களையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
140 பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கேரளத்துக்கு ஏப்.9-ஆம் தேதி ஒரே கட்டமாக தோ்தல் நடத்தப்பட்டு மே 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
தொடர்புடையது

கிள்ளியூா் தொகுதியில் செல்வப்பெருந்தகை பிரசாரம்
ஓமலூா் தொகுதியில் 16 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் நிறைவு!

பாமக வேட்பாளா் பட்டியலுடன் அருணாசலேஸ்வரா் கோயிலில் செளமியா அன்புமணி தரிசனம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


