அஸ்ஸாம் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் தலைவர் கௌரவ் கோகோய் தனது வாக்கைச் செலுத்தினார்.
722 வேட்பாளர்களின் தேர்தல் விதியைத் தீர்மானிக்கும், அஸ்ஸாமின் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது.
ஜோரஹாட்டில் தனது தாயார் டோலி கோகோயுடன் இணைந்து கௌரவ் கோகோய் வாக்களித்தார்.
வாக்களித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், மாநிலத்தில் அமையவுள்ள புதிய அரசு, அனைத்து மக்களின் ஜனநாயக உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாக்கும். இன்று அஸ்ஸாம் மாநிலத்திற்கு ஒரு முக்கியமான நாள்.
அஸ்ஸாமின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் மக்கள் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்கப் போகிறார்கள். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஒரு வலிமையான, அச்சமற்ற, நம்பிக்கையான புதிய அஸ்ஸாம் உருவாகும்.
மாநில வாக்காளர்கள் அனைவரும் பெருமளவில் வெளியே வந்து, தங்கள் எதிர்காலத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தங்கள் அரசியலமைப்பு உரிமையைப் பயன்படுத்தி வாக்களிக்க வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்தலில், ஆளும் பாஜக தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. அதேவேளையில், 2016-ஆம் ஆண்டில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் கட்சி, மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முயன்று வருகிறது.
Summary
State Congress chief Gaurav Gogoi cast his vote for the Assembly polls in the state on Thursday and asserted that a powerful, fearless, confident and new Assam will emerge after the elections.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் முதல்வருக்கு மாஃபியாவுடன் தொடர்பு: கௌரவ் கோகோய் குற்றச்சாட்டு!

கௌரவ் கோகோயின் சொத்து மதிப்பு ரூ. 7.57 கோடியாக உயர்வு!

அஸ்ஸாம் ஜாதிய பரிஷத் தலைவர் லுரின்ஜோதி கோகோய் வேட்புமனு தாக்கல்!

அசாம் பேரவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் எம்.பி.!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


