மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

கார்கே மீது நடவடிக்கை கோரி தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார்!

கார்கே பேச்சால் ஹிந்துக்களுக்கு அவமரியாதை - பாஜக புகார்!

News image

அஸ்ஸாமில் கார்கே பிரசாரம் - PTI

Updated On :7 ஏப்ரல் 2026, 2:04 pm

குவாஹாட்டி : அஸ்ஸாமில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே மீது அம்மாநில பாஜக தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திடமும் அஸ்ஸாம் காவல் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டது.

இந்தியாவின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள அஸ்ஸாமில் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இன்று(ஏப். 7) மாலை முடிந்தது. ஏப். 9-இல் அம்மாநிலத்தில் ஒரேகட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், அஸ்ஸாமில் ஸ்ரீபூமி மாவட்டம், நீலம்பஸார் பகுதியில் திங்கள்கிழமை(ஏப். 6) நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் கார்கே வெளிப்படுத்திய கருத்துகள், குறிப்பிட்ட பிரிவை கடுமையாகத் தாக்குவதாகவும் பொறுப்புணர்ச்சி இல்லாத பேச்சாக அமைந்திருந்ததாகவும் ஹிந்து மத நம்பிக்கைகளுக்கும் பண்பாட்டுக்கும் அவமரியாதையாக அமைந்திருப்பதாகவும் இத்தகைய கருத்துகள் கண்டனத்துக்குரியது மட்டுமின்றி சமூக ஒற்றுமைக்கு ஆபத்தானதும்கூட என்று அஸ்ஸாம் பிரதேச பாஜக தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கார்கே மீது நடவடிக்கை கோரி அஸ்ஸாம் பாஜக பசிஸ்தா காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறது. மேற்கண்ட விவகாரத்தில் அஸ்ஸாம் மாநில தேர்தல் ஆணையத்திடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் பிரசாரத்தில் சமூகத்தில் பிரிவினையை தூண்டும் கருத்துகளைப் பேசியதற்காக கார்கே மீது சட்டரீதியாக நடவடிக்கைகளை உடனடியாக எடுக்கவும் பாஜக தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Summary

Assam BJP files complaints against Kharge with police, EC over ''hate'' speech

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.