ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததை அடுத்து அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் சட்டத் திருத்த மசோதா, கடந்த வாரம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் அளித்ததை அடுத்து, அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வருகின்ற 2026 ஜூன் 2 முதல் சட்டப்பூர்வமாக அமலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசிதழ்
பின்னணி: ஒருங்கிணைந்த ஆந்திரம் 2 மாநிலங்களாக ஆந்திரம், தெலங்கானா எனப் பிரிக்கப்பட்டது. அப்போது, முந்தைய ஆந்திர மாநில தலைநகராக விளங்கிய ஹைதராபாத் நகரம், தெலங்கானா மாநிலத் தலைநகராக்கப்பட்டது. அதேநேரத்தில் ஆந்திரத்துக்கு அமராவதி தலைநகராக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. எனினும், 2019 முதல் 2024 வரை ஆந்திரத்தில் ஆட்சியில் இருந்த ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் அரசு, ஆந்திரத்துக்கு 3 தலைநகரங்களை அறிவித்தது.
ஆனால் 2024 தோ்தலில் தெலுங்கு தேசம் கட்சி வென்று மீண்டும் ஆட்சியமைத்ததும் அமராவதி மீண்டும் தலைநகராக்கப்பட்டது. இதுதொடர்பான சட்டத் திருத்த மசோதா கொண்டுவரக் கோரி ஆந்திர அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பியது.
இதையடுத்து, நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
Summary
Amaravati is the Capital of Andhra Pradesh! Notified in the Gazette!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைநகர் அமராவதி! நிலம் வழங்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 40,000 குத்தகைத் தொகை: ஆந்திர முதல்வர்

அமராவதி பாலியல் வழக்கு! யாருக்கு அதிக தோழிகள்? பந்தயம் கட்டிய குற்றவாளிகள்

ஆந்திரத்தின் தலைநகராக அமராவதி: இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றம்!

ஆந்திரத்தின் ஒரே தலைநகர் அமராவதி! மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



