ஆந்திர பிரதேசத்தின் தலைநகராக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
ஆந்திர பிரதேச மாநிலத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா, மாநிலங்களவையில் இன்று (ஏப். 2) ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக, புதன்கிழமையில் மக்களவையிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இம்மசோதா குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரின் ஒப்புதல் கிடைத்ததும், 2026 ஜூன் 2 முதல் ஆந்திர தலைநகா் அமராவதி என்று சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைத்துவிடும்.
பின்னணி: ஒருங்கிணைந்த ஆந்திரம் 2 மாநிலங்களாக ஆந்திரம், தெலங்கானா எனப் பிரிக்கப்பட்டபோது, முந்தைய ஆந்திர மாநில தலைநகராக விளங்கிய ஹைதராபாத் நகரம், தெலங்கானா மாநிலத் தலைநகராக்கப்பட்டது.
அதேநேரத்தில் ஆந்திரத்துக்கு அமராவதி தலைநகராக இருக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், 2019-ல் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும், ஒரே தலைநகரம் அமைப்பதற்குப் பதிலாக 3 தலைநகரங்கள் இருக்கும் என அப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்தார்.
இந்த நிலையில், மீண்டும் 2024 தோ்தலில் தெலுங்கு தேசம் கட்சி வென்று ஆட்சியமைத்ததும் அமராவதி மீண்டும் தலைநகராக்கப்பட்டது. இதுதொடா்பான மசோதா, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு தற்போது ஒப்புதலும் பெற்றுள்ளது.
தலைநகராக அமராவதி ஒப்புதலைப் பெற்றதைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியான தெலுங்கு தேச கட்சியினர் கேக் வெட்டிக் கொண்டாடி வருகின்றனர்.
Summary
Parliament passes Andhra Pradesh Reorganisation (Amendment) Bill, 2026 to recognise Amaravati as permanent capital of state.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மகளிர் இடஒதுக்கீடு ரத்து முட்டுக்கட்டை அல்ல, பெண்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்: ஆந்திர முதல்வர்

சவுக்கு சங்கர் ஆந்திரத்தில் கைது!

ஆந்திரத்தின் தலைநகர் அமராவதி! அரசிதழில் வெளியீடு!

ஆந்திரத்தின் ஒரே தலைநகர் அமராவதி! மக்களவையில் மசோதா நிறைவேற்றம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



