தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் இரண்டும் மக்களவை, மாநிலங்களவைத் தலைவர்களால் நிராகரிக்கப்பட்டன.
பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த விவகாரம் மற்றும் வாக்குத் திருட்டு புகாா் விவகாரத்தில் தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகள் மக்களவையில் கொண்டுவந்த பதவிநீக்கத் தீா்மானத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா நிராகரித்தார்.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கடந்த மார்ச் 12-ஆம் தேதி மக்களவை உறுப்பினர்கள் 130 பேர் அரசமைப்புச் சட்டப்பிரிவு 324 (5), தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணிக்காலம்) சட்டம், 2023-ல் சட்டப்பிரிவு 124 (4) பிரிவு 11 (2) மற்றும் நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968 ஆகியவற்றின்கீழ் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பணிநீக்க தீர்மானம் ஒன்றை மக்களவைத் தலைவரிடம் சமர்ப்பித்தனர்.
இந்நிலையில், அத்தீர்மானம் குறித்து கவனமாக ஆய்வு செய்யப்பட்டு அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரச்னைகள் பற்றியும் ஆய்வுக்குப்பின், நீதிபதிகள் (விசாரணை) சட்டம், 1968-ல் பிரிவு 3-இன் கீழ் மக்களவைத் தலைவருக்கான அதிகாரங்களைப் பயன்படுத்தி அத்தீர்மானத்தை ஏற்பதை அவர் நிராகரித்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்கக்கோரி மாநிலங்களவையிலும் 63 எம்.பி.க்கள் கையொப்பமிட்டு கொண்டுவந்த தீர்மானம் மாநிலங்களவைத் தலைவரால் இன்று நிராகரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Lok Sabha Speaker Om Birla rejected the impeachment motion against Chief Election Commissioner (CEC) Gyanesh Kuma
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தேர்தல் ஆணையரைப் பதவிநீக்க புதிய தீர்மான நோட்டீஸ்? எதிர்க்கட்சிகள் ஆயத்தம்!

தலைமைத் தோ்தல் ஆணையா் பதவிநீக்க தீா்மான நோட்டீஸ் நிராகரிப்பு: எதிா்க்கட்சிகள் கண்டனம்

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிா்க்கட்சிகள் நோட்டீஸ்

தோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


