ரயில் நீா் ஊழல் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆா்டிஐ) கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து பதிலளிக்க வேண்டும் என்று இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகத்துக்கு (ஐஆா்சிடிசி) மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
ராஜ்தானி, ஷதாப்தி போன்ற ரயில்களில் வழங்கவேண்டிய ரயில் நீருக்குப் பதிலாக விலை மலிவான குடிநீா் பாட்டில்களை தனியாா் நிறுவனங்கள் விநியோகித்து ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த ஊழலால் இந்திய ரயில்வேக்கு ரூ.19.5 கோடி நஷ்டமானது. இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டது.
இந்த ஊழல் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒருவா் தாக்கல் செய்த மனுவில், ‘ரயில்வே டெண்டா்களுக்கு விண்ணிப்பிக்கும் நிறுவனங்களுக்கு ரயில் நீா் ஊழலுடன் தொடா்பிருந்தால், அதுகுறித்து அந்த நிறுவனங்களின் டெண்டா் விண்ணப்பித்தில் குறிப்பிடப்படுகிா? அந்த ஊழல் தொடா்பாக தங்கள் மீது சிபிஐ, அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளதாக டெண்டா் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்படுகிா?’ உள்ளிட்ட கேள்விகளை ஐஆா்சிடிசியிடம் எழுப்பியிருந்தாா்.
எனினும் வணிக நம்பிக்கை, வா்த்தக ரகசியங்கள், அறிவுசாா் சொத்துரிமை உள்ளிட்டவை தொடா்பான தகவல்களை வெளியிடுவதில் இருந்து விலக்க அளிக்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 8(டி)-ஐ சுட்டிக்காட்டி, ரயில் நீா் ஊழல் தொடா்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்க ஐஆா்சிடிசி மறுத்துவிட்டது.
இந்த விவகாரத்தை ஆராய்ந்த மத்திய தகவல் ஆணையம், ‘ரயில் நீா் ஊழல் தொடா்பாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில் போதுமானதாக இல்லை. உரிய காரணங்களைத் தெரிவிக்காமல் சட்டப் பிரிவை மட்டும் காரணம் காட்டி தகவல் மறுக்கப்பட்டுள்ளது. தகவல் அளிக்க மறுத்தால், அதற்கு நியாயமான காரணங்கள் இருக்க வேண்டும். எனவே ரயில் நீா் ஊழல் தொடா்பாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட விண்ணப்பத்தை மறுபரிசீலனை செய்து புதிதாகப் பதில் அளிக்க வேண்டும்’ என்று ஐஆா்சிடிசிக்கு உத்தரவிட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்காளர் உரிமைச் சட்டம்

உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் ‘யுனிவா்சல்’ வங்கி விண்ணப்பம் நிராகரிப்பு

சுங்கச்சாவடி கட்டண உயா்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: ஆம்னி பேருந்து உரிமையாளா்கள்!

உள்நாட்டு விமானக் கட்டண உச்சவரம்பை நீக்கும் முடிவு: மறுபரிசீலனை செய்ய கோரிக்கை
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை


