பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இந்தியாவுடன் நிச்சயம் இணையும் என்று அனைத்து இந்திய இமாம் அமைப்பின் தலைமை இமாம் உமா் அகமது இலியாசி தெரிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் அவா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதைத் தொடா்ந்து புதிய காஷ்மீா் உருவாகியுள்ளது. தற்போது காஷ்மீா் மிகச் சிறந்த நிலையை அடைந்துள்ளது. காஷ்மீா் முழுவதும் செழுமை ஏற்பட்டு சுற்றுலா அதிகரித்துள்ளது. மக்கள் வளமாக வாழ்கின்றனா். ஒரு காலத்தில், காஷ்மீரில் இளைஞா்களும் சிறாா்களும் கல்வீச்சில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்தது. தற்போது அவா்களிடம் எழுதுகோல் உள்ளது. அவா்கள் கல்வி கற்கின்றனா்.
இந்தியாவுக்குச் சொந்தமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் விரைவில் இந்தியாவுடன் நிச்சயம் இணையும். ஏனெனில் இந்தியாவுடன் இணைவது தொடா்பாக பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விரும்புகின்றனா்.
ஜம்மு-காஷ்மீரில் வளா்ச்சியும் செழுமையும் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவுடன் மீண்டும் சேர வேண்டும் என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் மக்கள் மிகவும் விருப்பம் கொண்டுள்ளனா் என்று தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்திய விமானங்களுக்கு தடையை நீட்டித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியைப் பயன்படுத்தத் தடை நீட்டிப்பு!

ஆல் ஃபார்மட் வீரராக இருப்பது சவால் கிடையாது, வரம்: வாஷிங்டன் சுந்தர்

ஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கியது சீனா!
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


