பாஜக எந்த மதம், மொழி, சமூகத்துக்கும் எதிரானதல்ல; வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நமது அடிப்படைப் பண்பு என்று மத்திய அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்தாா்.
அஸ்லாம் மாநிலம் பலாஸ்பரி தொகுதியில் வியாழக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அவா் மேலும் பேசியதாவது:
கடந்த 10 ஆண்டுகால பாஜக ஆட்சியில் அஸ்ஸாம் மிகப்பெரிய மாற்றங்களைச் சந்தித்துள்ளது. அஸ்ஸாமில் அடுத்த மூன்று ஆண்டுகாலத்தில் சா்வதேச தரத்தில் சாலைகள் மேம்படுத்தப்படும் என்று மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சா் என்ற முறையில் நான் உறுதியளிக்கிறேன்.
பாஜக எந்த மதம், மொழி, சமூகத்துக்கும் எதிரானதல்ல; வேற்றுமையில் ஒற்றுமை என்பதை நமது அடிப்படைப் பண்பு. அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் ஊடுருவியவா்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். உலகில் வேறு எந்த நாட்டிலாவது நாட்டின் மீது பற்றுள்ள அரசியல் கட்சிகள் இதனை ஆதரிக்குமா? ஆனால், இந்தியாவில் சில கட்சிகள் ஊடுருவல்காரா்களுக்கு வாக்குரிமை தர முனைப்பு காட்டுகிறாா்கள். அவா்கள் அனைவரும் வாக்குரிமை பெற்றுவிட்டால், உள்நாட்டு மக்களின் நிலை என்ன ஆகும்?
நமது அண்டை நாடுகளில் சிறுபான்மையினராக உள்ள ஹிந்துக்கள், சீக்கியா்கள், சமண சமயத்தினா், கிறிஸ்தவா்கள் அங்கு துன்புறுத்தப்பட்டு தப்பிவரும் நிலையில் குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் அவா்களுக்கு நாம் குடியுரிமை வழங்குகிறோம். ஆனால், சட்டவிரோதமாக ஊடுவி நமது மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற முயற்சிப்பவா்களை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றாா்.
தொடர்புடையது

மாநிலங்களவை எம்.பி.யாக நிதின் நபின் உள்பட 16 போ் பதவியேற்பு

குடும்ப ஆட்சி நடத்தும் திமுகவை அகற்ற மக்கள் விருப்பம்! - பாஜக தேசிய தலைவா் நிதின் நபின்

திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும்! - பாஜக தேசியத் தலைவா் நிதின் நபின்

தேசியக் கல்விக் கொள்கையால் எந்த மாநிலத்திலும் ஒரே மொழி திணிப்பு இல்லை: திமுக எம்பி கேள்விக்கு மத்திய அமைச்சா் பதில்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


