பிகாரைப் போல் கேரளத்திலும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவு கோரி கேரளத்தில் பிரசாரத்துக்கு வருகை தந்த பிகாரின் இளம் வயது எம்எல்ஏ மைதிலி தாக்குர் தெரிவித்தார்.
கேரளத்தில் வரும் ஏப். 9-இல் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் தலைவர்கள் பம்பரமாகச் சுழன்று பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு மக்கள் ஆதரவைத் தங்கள் அணிகளுக்குத் திரட்டி வருகின்றனர்.
அந்த வகையில், பிரசாரத்தின் ஒருபகுதியாக திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களுடன் மைதிலி தாக்குர் பேசியதாவது, “கேரளத்துக்கு இரண்டாவது முறையாக வந்திருக்கிறேன். இங்குள்ள தேர்தல் சூழல் அருமையாக இருக்கிறது. மக்களிடையே மிகுந்த உற்சாகம் நிலவுவதைப் பார்க்க முடிகிறது. அவர்கள் வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றுடன் துணை நிற்கிறார்கள்.
வளர்ச்சியடைந்தவொரு இந்திய நாட்டுக்கு, வளர்ச்சியடைந்தவொரு கேரளம் அத்தியாவசியமாகிறது. நாங்கள் ஆதரவு, அன்பு, வாழ்த்துகளை எல்லோரிடமிருந்தும் பெற்று வருகிறோம். நாங்கள் சிறப்பாகச் செயல்படுவோம் என்ற நம்பிக்கை உள்ளது.
மக்களின் உற்சாகத்தைப் பார்க்கும்போது, கேரளத்தில் பாஜக சிறப்பாக தேர்தலில் செயல்படும் என்ற உணர்வு ஏற்படுகிறது. பிகாரில், மக்கள் வளர்ச்சி, மேம்பாட்டுக்காக வாக்கு செலுத்தினர். அதேபாணியை கேரளத்திலும் நாம் பார்க்கவிருக்கிறோம்” என்றார்.
Summary
Maithili Thakur says, "In Bihar, people voted for development, and we will see the same in Keralam too..."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காதலிக்க நேரமில்லை: மிருணாள் தாக்குர்
நடிகருடன் திருமணம்... தயாரிப்பாளர் பேச்சால் வெட்கப்பட்ட மிருணாள்!
சம்பளமல்ல, நல்ல கதாபாத்திரங்களுக்காகவே காத்திருக்கிறேன்: மிருணாள் தாக்குர்

இளம் வயதில் அரசியலுக்கு வந்தது ஏன்?: மனம் திறந்த மைதிலி தாக்குர் | Maithili Thakur |
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



