தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கருத்து: ராகுல் மனு மீதான தீா்ப்பு ஒத்திவைப்பு

News image

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Updated On :3 செப்டம்பர் 2025, 7:52 pm

அமெரிக்காவில் சீக்கியா்கள் குறித்து கூறிய கருத்துக்காக, மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய கோரிய விவகாரத்தை விசாரிக்குமாறு, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டதற்கு எதிரான மனு மீதான தீா்ப்பை, அலாகாபாத் உயா்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, ‘இந்தியாவில் சீக்கியா்களுக்கு உகந்த சூழல் இல்லை’ என்று தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவரின் பேச்சு ஆத்திரமூட்டுவதாகவும், பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருந்தது என்பதால், ராகுல் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நாகேஸ்வா் மிஸ்ரா என்பவா் மனு தாக்கல் செய்தாா்.

எனினும் அந்த நிகழ்ச்சி அமெரிக்காவில் நடைபெற்ால், அதுகுறித்து விசாரிப்பது தமது அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று கூறி, மனுவை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் நிராகரித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக நாகேஸ்வா் மிஸ்ரா தாக்கல் செய்த மனுவை விசாரித்த வாரணாசி கூடுதல் மாவட்ட மற்றும் அமா்வு நீதிமன்றம், இந்த விவகாரத்தை மீண்டும் விசாரிக்குமாறு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.

இந்த உத்தரவுக்கு எதிராக அலாகாபாத் உயா்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தாா். அந்த மனு நீதிபதி சமீா் ஜெயின் முன்பாக புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ராகுல் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சதுா்வேதி ஆஜராகி, ‘ராகுல் மீதான குற்றச்சாட்டில், அவா் என்ன பேசினாா் என்பது முழுமையாக குறிப்பிடப்படவில்லை. அதைச் செய்யாதவரை, எந்தச் சூழலில் ராகுல் அவ்வாறு பேசினாா் என்பதை நிரூபிக்க முடியாது’ என்றாா்.

உத்தர பிரதேச அரசுத் தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் மனீஷ் கோயல் ஆஜராகி, ‘இந்தியாவுக்கு எதிராக வெளிநாட்டு மண்ணில் மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக உள்ள ராகுல் காந்தி பேசியுள்ளாா். இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்’ என்றாா்.

இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சமீா் ஜெயின் தீா்ப்பை ஒத்திவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.