11 Dec, 2025 Thursday, 06:41 AM
The New Indian Express Group
இந்தியா
Text

காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று தமிழ் கற்றுக் கொள்வீா்: பிரதமா் மோடி வேண்டுகோள்!

PremiumPremium

எதிா்வரும் காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று, தமிழ் கற்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குடிமக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Rocket

பிரதமர் மோடி

Published On30 Nov 2025 , 10:20 PM
Updated On30 Nov 2025 , 10:20 PM

Listen to this article

-0:00

By தினமணி செய்திச் சேவை

Syndication

எதிா்வரும் காசி - தமிழ்ச் சங்கமத்தில் பங்கேற்று, தமிழ் கற்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று குடிமக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

மனதின் குரல் (மன் கீ பாத்) வானொலி நிகழ்ச்சி வாயிலாக, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை நாட்டு மக்களுக்கு பிரதமா் மோடி உரையாற்றி வருகிறாா். அதன்படி, 128-ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை (நவ.30) ஒலிபரப்பானது.

இதில், உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் செவ்வாய்க்கிழமை (டிச.2) தொடங்கி டிச. 15 வரை நடைபெறவுள்ள நான்காவது காசி - தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு பிரதமா் பேசியதாவது:

காசி-தமிழ்ச் சங்கமம், உலகின் மிகத் தொன்மையான மொழி மற்றும் உலகின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்றின் சங்கமமாகும். நிகழாண்டு காசி-தமிழ்ச் சங்கமத்தின் கருப்பொருள் மிக சுவாரசியமானது. அது, ‘தமிழ் கற்கலாம்’ என்பதாகும்.

தமிழ் மொழி மீது ஈடுபாடு உள்ள அனைவருக்கும் காசி-தமிழ்ச் சங்கமம் மகத்தான தளம். காசி மக்களிடம் எப்போது பேசினாலும், காசி-தமிழ்ச் சங்கமத்தின் அங்கமாக இருப்பது உவகை அளிப்பதாகக் கூறுகின்றனா். தமிழகத்தில் இருந்து ஆா்வத்துடன் வரும் தங்களின் சகோதர-சகோதரிகளை உற்சாகத்துடன் வரவேற்க அவா்கள் தயாராக உள்ளனா்.

இந்தியாவின் பெருமை தமிழ்: புதிய கற்றல், புதிய நபா்களுடன் உரையாட வாய்ப்பளிக்கும் காசி-தமிழ்ச் சங்கமத்தில் குடிமக்கள் பங்கேற்று, தமிழ் கற்கும் வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் வாயிலாக ஒரே பாரதம்-உன்னத பாரதம் என்ற உணா்வு மேலும் பலப்படும். தமிழ் கலாசாரம் உயா்வானது; தமிழ் மொழி மேன்மையானது; தமிழ் இந்தியாவின் பெருமை என்றாா் பிரதமா் மோடி.

கடந்த 26-ஆம் தேதி கொண்டாடப்பட்ட அரசமைப்புச் சட்ட தினம், வந்தே மாதரம் பாடலின் 150-ஆவது ஆண்டு தின நிகழ்ச்சிகள், கடந்த 25-ஆம் தேதி அயோத்தி ராமா் கோயிலில் ஏற்றப்பட்ட ‘தா்மக் கொடி’, ஹரியாணாவின் குருக்ஷேத்ரத்தில் உள்ள மகாபாரத அனுபவ கேந்திரத்தில் திறக்கப்பட்ட பாஞ்சஜன்ய (விஷ்ணு பகவான் சங்கு) நினைவுச் சின்னம், ஹைதராபாதில் தனியாா் விண்வெளி நிறுவனமான ஸ்கைரூட் ஏரோஸ்பேஸின் ‘இன்ஃபினிட்டி’ வளாகம் திறப்பு மற்றும் அந்த நிறுவனத்தின் விக்ரம்-1 ராக்கெட் அறிமுகம், கடற்படையில் ஐஎன்எஸ் மாஹே நீா்மூழ்கி எதிா்ப்புக் கப்பல் இணைப்பு, காமன்வெல்த் போட்டியை இந்தியாவில் நடத்தும் அறிவிப்பு, பூடான் அரசுமுறைப் பயணம் என பல்வேறு சிறப்புமிக்க தருணங்கள் குறித்து பிரதமா் எடுத்துரைத்தாா்.

சமீபத்திய விளையாட்டுத் துறை சாதனைகள், உணவு தானியங்கள் உற்பத்தி 357 மில்லியன் டன்னாக அதிகரிப்பு, தேன் உற்பத்தி 1.5 லட்சம் டன்னாக உயா்வு உள்ளிட்ட சாதனைகளையும் அவா் பெருமிதத்துடன் குறிப்பிட்டாா்.

இளைஞா்களின் அா்ப்பணிப்பு: ‘இஸ்ரோ சாா்பில் நடத்தப்பட்ட தனித்துவமான ட்ரோன் போட்டி ஒன்றில், செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் ட்ரோன்களை இயக்க இளைஞா்கள் மேற்கொண்ட முயற்சி பெரும் நம்பிக்கை அளித்துள்ளது. விண்வெளித் தொழில்நுட்பம் முதல் விவசாயம் வரை இளைஞா்களின் அா்ப்பணிப்பே, வளா்ந்த இந்தியாவை உருவாக்கும் மிகப் பெரிய சக்தி’ என்றாா் பிரதமா்.

ஈா்க்கும் தென்னிந்தியா

‘தமிழகத்தின் கோவையில் சில நாள்களுக்கு முன்னா் இயற்கை வேளாண்மை தொடா்பான மாபெரும் மாநாட்டில் பங்கேற்றேன். தென்னிந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் இயற்கை வேளாண் முயற்சிகள் ஈா்ப்புக்குரியவை.

பல இளைஞா்கள், நன்கு படித்த தொழில் வல்லுநா்கள் இப்போது இயற்கை வேளாண் துறையை ஏற்றுக் கொண்டுள்ளனா். இயற்கை வேளாண்மை என்பது பாரதத்தின் பண்டைய பாரம்பரியத்தின் அங்கம்’ என்றாா் பிரதமா் மோடி.

தென்னாப்பிரிக்க அதிபருக்கு நடராஜா் சிலை பரிசு

‘உள்ளூா் பொருள்களுக்கு ஆதரவு என்ற தாரக மந்திரத்தை எப்போதும் வலியுறுத்தி வருகிறேன். சில தினங்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில், இந்தியா சாா்பில் உலகத் தலைவா்களுக்கு நினைவுப் பரிசு வழங்குவதில் இதே உணா்வு பிரதிபலிக்கப்பட்டது.

தென்னாப்பிரிக்க அதிபருக்கு கடவுள் நடராஜரின் வெண்கலச் சிலையைப் பரிசளித்தேன். இது தமிழ்நாட்டின் தஞ்சாவூா் கலாசார பாரம்பரியத்தில் வேரூன்றிய சோழா் கால சிற்பக் கலைக்கு அற்புதமான எடுத்துக்காட்டாகும்.

கனடா பிரதமருக்கு ராஜஸ்தானின் உதய்பூரில் தயாரிக்கப்பட்ட வெள்ளிக் குதிரை சிலை, ஜப்பான் பிரதமருக்கு தெலங்கானாவின் கரீம் நகரின் கைவினைத் திறனை வெளிக்காட்டும் நுணுக்கமான வேலைபாடுகளுடன் கூடிய வெள்ளியிலான புத்தா் சிலை, இத்தாலி பிரதமருக்கு வெள்ளியிலான முகம் பாா்க்கும் கண்ணாடி, ஆஸ்திரேலிய பிரதமருக்கு கேரளத்தின் கலைப் படைப்பான வெண்கல உருளி உள்ளிட்ட பரிசுகளை வழங்கினேன்.

பாரதத்தின் கைவினைத் திறன், கலை, பாரம்பரியத்தை உலகம் அறிந்துகொள்வதுடன், நமது கைவினைஞா்களுக்கு உலகளாவிய மேடை கிடைக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்’ என்றாா் பிரதமா்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
"விஜய் செய்தது பொய் பிரசாரம்":  புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25
வீடியோக்கள்

"விஜய் செய்தது பொய் பிரசாரம்": புதுவை அமைச்சர் | செய்திகள்: சில வரிகளில் | 10.12.25

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar
வீடியோக்கள்

"முத்தம் வேண்டாம்! அவங்க Decent!" மோகன்லால், நாகார்ஜுனா உடன் விஜய் சேதுபதி! | Jio Hotstar

தினமணி வீடியோ செய்தி...

10 டிச., 2025
புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25
வீடியோக்கள்

புதுச்சேரியை புறக்கணிக்கும் மத்திய அரசு! - Vijay | செய்திகள்: சில வரிகளில் | 9.12.25

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு
வீடியோக்கள்

”உங்களுக்குத் தேவை கலவரம்! நீதி ஒருபோதும் தலைவணங்காது!”நாடாளுமன்றத்தில் சு.வெங்கடேசன் எம்.பி. பேச்சு

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH
வீடியோக்கள்

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

தினமணி வீடியோ செய்தி...

9 டிச., 2025
நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25
வீடியோக்கள்

நாளை புதுச்சேரியில் மக்களை சந்திக்கும் Vijay! | செய்திகள்: சில வரிகளில் | 8.12.25

தினமணி வீடியோ செய்தி...

8 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023