14 Dec, 2025 Sunday, 10:22 PM
The New Indian Express Group
இந்தியா
Text

தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்களை இலங்கைக்கு அனுப்பிய இந்தியா!

PremiumPremium

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட இலங்கையில் மீட்பு பணிக்குத் துரிதமாக சென்ற இந்திய குழு..

Rocket

தேசிய பேரிடர் மீட்புப் படை (கோப்புப்படம்)

Published On29 Nov 2025 , 6:12 AM
Updated On29 Nov 2025 , 6:26 AM

Listen to this article

-0:00

By இணையதளச் செய்திப் பிரிவு

Parvathi

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயல் இலங்கையை புரட்டிப்போட்டுவரும் நிலையில் 80 தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்களை இலங்கைக்கு அனுப்பியதாக அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள டிட்வா புயலால் இலங்கையில் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இலங்கையில் வெள்ளம் நிலச்சரிவால் கடந்த மூன்று நாள்களில் இதுவரை 80 உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் வரலாறு காணாத வெள்ளத்தைத் தொடர்ந்து நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக 80 தேசிய பேரிடர் மீட்புப் பணியாளர்கள் மற்றும் மோப்ப நாய்கள் கொண்ட ஒரு குழுவையும் இந்தியா இலங்கைக்கு அனுப்பியுள்ளது.

தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF)பணியாளர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளனர். சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் தில்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் விமானப்படைத் தளத்திலிருந்து நான்கு மீட்பு நாய்களுடன் சேர்ந்து, IL-76 IAF விமானத்தில் இலங்கைக்குப் புறப்பட்டதாகச் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடல், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த, ஊதப்பட்ட படகுகள், ஹைட்ராலிக் கட்டிங் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்கள், முதலுதவி கருவிகள் மற்றும் பிற அத்தியாவசிய மீட்புப் பொருள்களை மீட்புப் படையினர் அணி எடுத்துச் செல்வதாக அவர் கூறினார்.

இலங்கைக்கு உதவுவதற்காக இந்தியாவால் தொடங்கப்பட்ட ஆபரேஷன் சாகரின் ஒரு பகுதியாகும் இது. டிட்வா புயல் காரணமாக வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளை ஏற்படுத்தி உள்கட்டமைப்புகளைச் சேதப்படுத்தியதையடுத்து இலங்கை மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றை எதிர்கொள்கிறது.

புயலை அடுத்து, விழுப்புரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய தமிழக கடலோர மாவட்டங்களில் மத்திய அவசரக்கால படை 14 குழுக்களை நிறுத்தியுள்ளது.

புதுச்சேரிக்குக் கூடுதல் குழுக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன, அதே நேரத்தில் மகாராஷ்டிரத்தின் புணே மற்றும் குஜராத்தின் வதோதராவில் உள்ள என்டிஆர்எஃப் தளங்களிலிருந்து 10 குழுக்கள் சென்னைக்குச் செல்கின்றன என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

India on Saturday sent a contingent of 80 NDRF rescuers and specialised search dogs to Sri Lanka for undertaking relief and rescue operations in the aftermath of unprecedented floods.

இதையும் படிக்க: சென்னையை நாளை மாலை தீவிர புயலாக நெருங்கும் டிட்வா! மழை எப்படி இருக்கும்?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எங்களை பின்தொடரவும்

ஒரு இடுகையைப் பகிரவும்

10%
Very Happy
9%
Happy
7%
Neutral
2%
Sad
3%
Angry
ஸ்ரீநிவாஸ்'s profile

ஸ்ரீநிவாஸ்

சென்னை · 2 mins ago

குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்

அடுத்த கதை
Follow us on Facebook
Follow us on Twitter
Twitter
துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies
வீடியோக்கள்

துரந்தர் படத்திற்கு தடை! அகண்டா 2 வசூல்! | இந்த வார Cinema Updates | Dinamani Talkies

தினமணி வீடியோ செய்தி...

14 டிச., 2025
Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25
வீடியோக்கள்

Messi -யிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் மமதா பானர்ஜி! | செய்திகள்: சில வரிகளில் | 13.12.25

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!
வீடியோக்கள்

Vels வர்த்தக மைய திறப்பு விழாவில் Kamal Hassan பேச்சு!

தினமணி வீடியோ செய்தி...

13 டிச., 2025
"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்
வீடியோக்கள்

"தவெகவில் கடுமையாக உழைப்பேன்! என் வாயை பிடுங்காதீங்க!" | செங்கோட்டையன்

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25
வீடியோக்கள்

கரூர் கூட்டல் நெரிசல் பலி வழக்கில் குழப்பம்! | செய்திகள்: சில வரிகளில் | 12.12.25

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!
வீடியோக்கள்

"எல்லாத்துக்கும் சினிமாவ காரணம் சொல்ல முடியாது!": இயக்குநர் Maari Selvaraj!

தினமணி வீடியோ செய்தி...

12 டிச., 2025
மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்
BUSINESS

மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி; ஆகஸ்டில் தொடக்கம்

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது

Wed, 17 May 2023