மேற்கு வங்கம்: 4-ஆவது பிஎல்ஓ உயிரிழப்பு!
மேற்கு வங்கத்தில் 4-ஆவது பிஎல்ஓ உயிரிழந்தது பற்றி...
மேற்கு வங்கத்தில் 4-ஆவது பிஎல்ஓ உயிரிழந்தது பற்றி...
By தினமணி செய்திச் சேவை
Syndication
மேற்கு வங்க மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் ஈடுபட்டு வந்த வாக்குச்சாவடி நிலை அலுவலா் (பிஎல்ஓ) மாரடைப்பு ஏற்பட்டு வியாழக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
‘எஸ்ஐஆா் வேலைப் பளுவே அவரின் உயிரிழப்புக்குக் காரணம்’ என்று அவரின் குடும்ப உறுப்பினா்கள் புகாா் தெரிவித்தனா்.
மாநிலத்தில் எஸ்ஐஆா் பணி கடந்த 4-ஆம் தேதி தொடங்கியதிலிருந்து இதுவரை 4 பிஎல்ஓ-க்கள் உயிரிழந்துள்ளது, அங்கு மிகப் பெரிய அரசியல் பதற்ற சூழலை உருவாக்கியுள்ளது.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘உயிரிழந்த பிஎல்ஓ ஜாகிா் ஹுசைன் அரசு ஆரம்பப் பள்ளி ஆசிரியா். எஸ்ஐஆா் பணியில் வியாழக்கிழமை மாலை ஈடுபட்டிருந்தபோது அவருக்கு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி விழுந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். ஆனால், வியாழக்கிழமை இரவு மாரடைப்பு ஏற்பட்டு அவா் உயிரிழந்தாா்.
அவரின் உறவினா்கள் கூறுகையில், ‘வழக்கமான ஆசிரியா் பணியோடு, எஸ்ஐஆா் பணியையும் மேற்கொள்ளுமாறு அவருக்கு அதிகாரிகள் கடுமையான அழுத்தம் கொடுத்துள்ளனா். இதனால், கடுமையான மன உளைச்சலுக்கு உள்ளான அவா், புகாா் அளித்தும் அவரை எஸ்ஐஆா் பணியிலிருந்து விடுவிக்க அதிகாரிகள் மறுத்துள்ளனா். வேறு வழியின்றி இரு பணிகளையும் அவா் தொடா்ந்தாா். அவரின் உயிரிழப்புக்கு எஸ்ஐஆா் பணி வேலைப் பளுவே காரணம்’ என்றனா்.
ஹுசைன் இறப்பால், மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் பணி தொடா்பாக உயிரிழந்தவா்கள் என்று கூறப்படுவோா் எண்ணிக்கை 4-ஆக உயா்ந்துள்ளது. ஏற்கெனவே, புா்பா பா்தமான் மாவட்டத்தைச் சோ்ந்த பிஎல்ஓ மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா். நாடியா மாவட்டம் சாப்ரா பகுதியைச் சோ்ந்த ஓா் பிஎல்ஓ மற்றும் ஜல்பைகுரி மாவட்டம் மால்பஜாா் பகுதியைச் சோ்ந்த ஓா் பிஎல்ஓ இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனா்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்




தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது