தெலங்கானாவின், சங்கரெட்டி மாவட்டம், பஷ்யல்ராம் தொழில்துறை பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் திங்கள்கிழமை ஏற்பட்ட வெடி விபத்தில் ஏழு பேர் உயிரிழந்திருக்கலாம் என்றும், 2 பேர் காயமடைந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.
இந்த அணு உலை வெடிப்பில் எத்தனை பேர் பலியாகினர் என்ற எந்த விவரங்களும் மாநில அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
சங்கரெட்டி மாவட்டத்தில் ரசாயன ஆலையில் இன்று காலை வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென அணு உலை வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வெடிப்பு நிகழும்போது கிட்டத்தட்ட 20 தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்ததால், தொழிலாளர்கள் சிலர் கிட்டத்தட்ட 100 மீட்டர் தூரத்திற்கு தூக்கி எறியப்பட்டதாக அங்கு நேரில் பார்த்தவர்கள் சிலர் தெரிவித்தனர். உடனடியாக தீப்பிழம்புகள் கிளம்பி, தொழிற்சாலையின் சில பகுதிகளை சூழ்ந்தன. ஆலை முழுவதும் கரும்புகை வெளியேறி வருகின்றது.

ரசாயன ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்து
சம்பவ இடத்துக்குத் தீயணைப்புப் படையினர் விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மீட்பு நடவடிக்கை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு மாற்றப்பட்டதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மீட்பு நடவடிக்கை நடந்து வருவதாகவும், காயமடைந்தவர்களின் நிலை உடனடியாகத் தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.
இந்த வெடி விபத்து குறித்து போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
SUMMARY
Seven people are feared dead and twenty others injured after a reactor explosion at a chemical plant in the Pasamailaram industrial area of Patancheru, Sangareddy district, on Monday.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குஜராத் ரசாயன ஆலையில் பயங்கர தீ! 16 தொழிலாளர்கள் படுகாயம்!

விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 17 பேர் பலி!

பட்டாசு ஆலையில் வெடி விபத்து: தொழிலாளி உயிரிழப்பு; 9 போ் காயம்
பட்டாசு ஆலை வெடி விபத்து: உரிமையாளா் கைது
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


