சத்தீஸ்கர் மாநிலத்தில் கூட்டாக ரூ.22 லட்சம் சன்மானம் அறிவித்து தேடப்பட்டு வந்த 13 நக்சல்கள், காவல் துறையினரிடம் இன்று சரணடைந்துள்ளனர்.
பிஜப்பூர் மாவட்ட காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில், அம்மாநிலத்தில் நக்சல்களாக செயல்பட்டு வந்த 8 பெண்கள் உள்ளிட்ட 13 பேர் இன்று (ஜூன் 27) சரணடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சரணடைந்த 13 பேரையும் காவல் துறையினர் தேடிவந்த நிலையில், அவர்களை பிடிக்க கூட்டாக ரூ.22 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, தேவி முச்சாகி (எ) பிரமிளா (வயது 21) என்ற பெண்ணை பிடிக்க ரூ.8 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் தற்போது சரணடைந்துள்ளார்.
இத்துடன், சரணடைந்தவர்களில், கோசா ஒயாம் (எ) ரமேஷ் (29) என்பவரின் மீது ரூ.5 லட்சமும், கோசி பொடியம் (27) எனும் பெண்ணை பிடிக்க ரூ.2 லட்சமும் வெகுமதிகளாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இவர்களுடன், சரணடைந்த சம்மி செம்லா (23), சோட்டு பார்சிக் (25), மோட்டி தட்டி (24), சுனிதா ஹெம்லா (24), மஞ்சுளா குஞ்சம் (27), சயிபோ பொடியம் (18) மற்றும் ஹுங்கி உண்டம் (21) ஆகியோரின் மீது தலா ரூ.1 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு அவர்களை பிடிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.
தற்போது சரணடைந்துள்ள நக்சல்கள் அனவருக்கும் அரசுத் திட்டத்தின் அடிப்படையில், ரூ.50,000 வழங்கப்பட்டு அவர்களது மறுவாழ்வுக்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில் (2025), சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 241 நக்சல்கள், பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
SUMMARY
13 Naxals wanted with a reward of Rs. 22 lakhs surrendered!
இதையும் படிக்க: இந்தியா - ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் உரையாடல்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மே.வங்கத்தில் ஆட்சியைப் பிடிக்க பாஜக 90 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது! - மமதா குற்றச்சாட்டு!

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை! தேடுதல் வேட்டை தீவிரம்!

ஒடிசாவில் 10 நக்சல்கள் சரண்!

சத்தீஸ்கரில் ஒரே நாளில் 108 நக்சல்கள் சரண்!
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


