டி20 உலக கோப்பையில் இன்று... இந்திய அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென்னாப்பிரிக்கா அபாரம்!தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஜி கே எம் தமிழ்குமரன் வெற்றிஆப்கானிஸ்தானில் பாகிஸ்தான் தாக்குதல்: இந்தியா கண்டனம்!சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்திப்புபாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல்: சோமாலியா பேச்சுவார்த்தை‘ஆபரேசன் த்ரஷி-1’: ஜம்மு - காஷ்மீரில் மேலும் ஒரு பயங்கரவாதியின் உடல் கண்டெடுப்பு! இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடி
/

கொல்கத்தா சட்டக் கல்லூரியின் கதையையே மாற்றிய மனோஜித்! அபாயப் பகுதியாக..

அபாயப் பகுதியாக கொல்கத்தா சட்டக் கல்லூரி மனோஜித் மாற்றியதாகக் குற்றச்சாட்டு.

News image
கொல்கத்தா சட்டக் கல்லூரி- PTI
Updated On :2 ஜூலை 2025, 11:37 am

DIN

கொல்கத்தா: கொல்கத்தா சட்டக் கல்லூரி முதலாமாண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மனோஜித் மிஸ்ரா பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடா்பாக, கல்லூரியின் முன்னாள் மாணவரும், வழக்குரைஞருமாக இருந்த மனோஜித் மிஸ்ரா மற்றும் 2 மூத்த மாணவா்கள், கல்லூரி காவலாளி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இந்த மனோஜித் மிஸ்ரா, கடந்த 2024ஆம் ஆண்டு மத்தியில், சட்டக் கல்லூரியின் ஆசிரியா் அல்லாத ஊழியராக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.

அது முதலே, கல்லூரியின் கதையே ஒட்டுமொத்தமாக மாறியிருக்கிறது. பல்வேறு விவகாரங்களை அவர் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். பெண்களுக்கு அவர் கொடுத்த தொல்லைகள் காரணமாக, கல்லூரியில் மாணவிகளின் வருகையே சரிந்துள்ளது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

கல்லூரிக்குள் எந்த கட்டுப்பாடும் இன்றி சுற்றித்திரிந்த மனோஜித், கண்ணில்படும் மாணவிகளை செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளப் பக்கக் குழுக்களில் பதிவேற்றுவது, பல பெண்களை காதலிப்பதாகத் தொல்லை கொடுப்பது என இருந்துள்ளார்.

இது பற்றி தற்போது ஏராளமான மாணவிகள் மௌனம் கலைத்து மனோஜித் பற்றி பேசி வருவதால் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

மாணவிகளை மட்டுமல்லாமல் மாணவர்களையும் மனோஜித் மிரட்டி, அடித்துத் துன்புறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த கல்லூரியையும் அபாயப் பகுதியாக மாற்றியதாக மனோஜித் மீது கல்லூரி மாணவ, மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏராளமான மாணவிகள் மனோஜித் காரணமாக கல்லூரிக்குச் செல்வதையே தவிர்த்துவிட்டோம் என்று கூறுவதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.