தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

தெலங்கானா ரசாயன ஆலை விபத்து: பலியானோர் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு!

தெலங்கானா ரசாயன ஆலை விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படுவது குறித்து...

News image

ரசாயன ஆலை விபத்து... - PTI

Updated On :1 ஜூலை 2025, 8:29 am

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில், ரசாயன ஆலையின் வெடிவிபத்தில், பலியானவர்களின் குடும்பங்களுக்கு அந்நிறுவனத்துடன் இணைந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படுவதை, அரசு உறுதி செய்யும் என அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கூறியுள்ளார்.

சங்காரெட்டி மாவட்டத்திலுள்ள, பாஷாமைலாரம் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வந்த சிகாச்சி மருந்து ஆலையில், நேற்று (ஜூன் 30) உலை வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், விபத்து ஏற்பட்ட இடத்தை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, இன்று (ஜூலை 1) நேரில் பார்வையிட்டார். அப்போது, செய்தியாளர்களுடன் பேசிய அவர், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.10 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.5 லட்சமும் இழப்பீடாக வழங்கப்படும் எனக் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:

“பலியானவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி இழப்பீடு வழங்க மாநில அரசு, மருந்து ஆலை நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தும். அரசு மற்றும் நிறுவனத் தரப்பிலிருந்து ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நான் உத்தரவு பிறப்பித்துள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.

மேலும், பலியானவர்களின் குடும்பங்களின் உடனடி தேவைகளுக்காக மாநில அரசு சார்பில் ரூ. 1 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, விபத்தில் பலியான தொழிலாளர்களில் பெரும்பாலானோர், ஒடிசா, பிகார், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SUMMARY

Telangana pharma plant accident: Rs. 1 crore compensation to the families of the victims!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.