இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

பொங்கல்: 8 சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையையொட்டி பெங்களூரு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

News image
Updated On :8 ஜனவரி 2025, 8:21 am

DIN

பொங்கல் பண்டிகையையொட்டி பெங்களூரு, சென்னையில் இருந்து சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வருகிற ஜன. 14 ஆம் தேதி(செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தெற்கு ரயில்வே சிறப்பு ரயில்களை அறிவித்து வருகிறது.

இந்நிலையில் பெங்களூரு- தூத்துக்குடி, பெங்களூரு - சென்னை, எர்ணாகுளம் - சென்னைக்கு இரு வழித்தடங்களிலும் சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பெங்களூரு - சென்னை

அதன்படி ஜன. 10 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயில்(07319) பெங்களூருவில் இருந்து காலை 8.05 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 2.40 க்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.

அன்றைய தினம் சென்னையில் இருந்து பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் ரயில்(07320) இரவு 10.50-க்கு பெங்களூருவை சென்றடையும்.

Story image

பெங்களூரு - தூத்துக்குடி

ஜன. 10 ஆம் தேதி(வெள்ளிக்கிழமை) சிறப்பு ரயில்(06569) பெங்களூருவில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் ஜன. 11 சனிக்கிழமை காலை 11 மணிக்கு தூத்துக்குடியை சென்றடையும்.

மறுமார்க்கமாக சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு ஜன. 12 ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 மணிக்கு மைசூரு வரை செல்லும்.

Story image

எர்ணாகுளம் - சென்னை

ஜன. 16 ஆம் தேதி(வியாழக்கிழமை) எர்ணாகுளத்தில் இருந்து மாலை 6.15 -க்கு புறப்படும் ரயில்(06046) மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 8.30 க்கு சென்னையை அடையும்.

மறுமார்க்கமாக ஜன. 17 (வெள்ளிக்கிழமை) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 10.30 மணிக்கு புறப்படும் ரயில்(06047) இரவு 11 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

Story image
Story image

திருவனந்தபுரம் - சென்னை

ஜன. 15 ஆம் தேதி( புதன்கிழமை) திருவனந்தபுரத்தில் இருந்து காலை 4.25 -க்கு புறப்படும் ரயில்(06058) அன்று இரவு 11 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தை அடையும்.

மறுமார்க்கமாக ஜன. 16 (வியாழக்கிழமை) நள்ளிரவு 1 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில்(06047) இரவு 8 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும்.

Story image
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.