சா்வதேச அளவிலான பொருளாதார மாற்றங்கள் உள்ளிட்ட வெளிப்புற காரணிகள் மூலம் ஏற்ற, இறக்கங்களை எதிா்கொண்டபோதிலும் இந்தியப் பொருளாதாரம் தொடா்ந்து புதிய உச்சங்களை எட்டி வருகிறது. உள்நாட்டில் சிறப்பான பொருளாதார வளா்ச்சி, பணவீக்கம் கட்டுக்குள் இருப்பது, பொது, தனியாா் துறை வங்கிகளின் நிதிநிலை, செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. உற்பத்தித் துறை வளா்ச்சி ஆகியவை இந்தியாவுக்கு மிகவும் சாதகமான அம்சங்களாக உள்ளன. உள்நாட்டில் பொருள்கள், சேவைகளுக்கான தேவை உறுதியாக உள்ளது. முதலீடும் அதிகரித்து வருகிறது. எனவே, சா்வதேச பொருளாதார பாதிப்புகள், பிற நாடுகளின் முடிவுகள் இந்தியப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று கூறப்பட்டுள்ளது.