நாடாளுமன்ற வளாகத்தில் பதாகையை ஏந்தி காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம்!
அமலாக்கத் துறையின் தவறான பயன்பாட்டை கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் பற்றி..
அமலாக்கத் துறையின் தவறான பயன்பாட்டை கண்டித்து காங்கிரஸ் எம்பிக்கள் போராட்டம் பற்றி..
By இணையதளச் செய்திப் பிரிவு
Parvathi
எம்பிக்கள் போராட்டம்: அமலாக்கத் துறையை மத்திய அரசு தவறாகப் பயன்படுத்துவதாக காங்கிரஸ் எம்பிக்கள் புதன்கிழமை நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்திக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையைத் தில்லி நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இந்த வழக்கில் கட்சித் தலைவர்கள் இரண்டு பேர் மீதான விசாரணை அமைப்பின் பணமோசடி குற்றச்சாட்டைத் தில்லி நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்க மறுத்ததன் மூலம் உண்மை வென்றது என்று அக்கட்சியின் எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.'சத்தியமேவ ஜெயதே, உண்மை வெல்லும்' என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியபடி, எம்.பி.க்கள் மகர துவாரப் படிக்கட்டுகளுக்கு முன்பாக அணிவகுத்து நின்று, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி, நரேந்திர மோடி அரசிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று வலியுறுத்தினர்.
காங்கிரஸ் அமைப்புப் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக், எம்.பி.க்கள் சசி தருர், தாரிக் அன்வர், குமாரி செல்ஜா, கே. சுரேஷ் மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
முன்னதாக, நீதிமன்ற நிவாரணத்தைத் தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கோரியது.
மேலும் தனது கட்சிக்கு எதிராகப் பழிவாங்கும் அரசியலை அம்பலப்படுத்துவதாகவும், காங்கிரஸ் தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளதாகவும் அமலாக்கத்துறையின் தவறான பயன்பாட்டிற்கு எதிராகத் தங்கள் பலத்தைக் காட்டப்போவதாகவும் காங்கிரஸ் கூறியது.
நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும், வெளியையும் நாங்கள் அவர்களை எதிர்த்துப் போராடுவோம். அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவோம் என்று கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் ஐந்து பேருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், நேஷனல் ஹெரால்டு வழக்கில் அவர்கள் மீது அமலாக்கத் துறை சுமத்திய பணமோசடி குற்றச்சாட்டைத் தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு ஏற்க மறுத்தது. ஏனெனில், அந்த அமைப்பின் விசாரணை முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் அல்லாமல், ஒரு தனிப்பட்ட புகாரின் அடிப்படையில் தொடங்கப்பட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.
Congress MPs on Wednesday protested in the Parliament House complex against the Centre over its alleged misuse of the Enforcement Directorate.
இதையும் படிக்க: தில்லி காற்று மாசு: அரசு, தனியார் அலுவலகங்களுக்கு முக்கிய உத்தரவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
குறிப்பாக மத்திய கிழக்கிலிருந்து தமிழத்திற்கு சுட விவரகூடாமான கடத்தல் நடவடிக்கைகள் பாரலிமுறது ஆசாரியமடல்





தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

சென்னை மெட்ரோவில் மெட்ரோ சாரங்கம் தோன்றும் மணி ஆகஸ்டு மாதம் தொடங்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்தது