எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மும்பையை மூழ்கடிக்கும் மழை! வானிலை மையம் சொன்ன நல்ல தகவல்!

மும்பையை மூழ்கடிக்கும் அளவுக்கு மழை பெய்யும் நிலையில் வானிலை மையம் சொன்ன ஒரு நல்ல தகவல் வந்திருக்கிறது.

News image

மும்பை மழை

Updated On :26 செப்டம்பர் 2024, 9:39 am

மும்பை: மும்பை மாநகரில், நேற்று முதல் பெய்த கனமழை காரணமாக, அங்கு தாழ்வான இடங்களில் வெள்ளம் சூழ்ந்துகொண்டிருப்பதால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கும் நிலையல், இந்திய வானிலை ஆய்வு மையம் ஒரு நல்ல தகவலை வெளியிட்டிருக்கிறது.

அதாவது, மகாராஷ்டிர மாநிலத்தில் அக்டோபர் 5ஆம் தேதி முதல் பருவமழையானது மெல்ல விலகும் என்று அறிவித்துள்ளது.

புதன்கிழமை இரவு பெய்த கனமழை காரணமாக, மகாராஷ்டிர மாநிலத்தில் மும்பை, புணே உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாகியுள்ளன. மும்பையில் கழிவுநீர் கால்வாயில் விழுந்த பெண் பலியானார்.

இந்த நிலையில், ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மும்பை மண்டல வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி சுனில் காம்ளே, இந்த பருவமழைக் காலத்தில் மகாராஷ்டிரத்துக்கு 2900 மி.மீ. மழை பெய்துள்ளது. இது சராசரியைக் காட்டிலும் 600 மி.மீ. மழை அதிகமாகும்.

இன்னும் 5 - 6 நாள்களில், பருவமழை படிப்படியாகக் குறைந்து, அக்டோபர் 5ஆம் தேதி முற்றிலும் விடைபெறுவதற்கான வாய்ப்பு உள்ளது, ஒருவேளை, தாமதமானால், அக்டோபர் 10ம் தேதி பருவமழை விடைபெறும் என எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

மும்பையில் நேற்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது, நேற்று ஒரே நாளில் 200 மி.மீ. மழை பதிவாகியிருக்கிறது. இன்றும் மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.